Close Menu
    What's Hot

    ஒரே நாளில் ஆசியாவை உலுக்கிய நிலநடுக்கங்கள்!. மியான்மர் முதல் ஆப்கான் வரை குலுங்கிய பூமி!.

    மகளிர் இடஒதுக்கீடு மசோதா அரசியல் ஆதாயமே!. கார்கே விமர்சனம்!

    பழம்பெரும் பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!. திரையுலகினர் இரங்கல்!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»அசாம் சாலையில் விமானம் தரையிறங்க அவசர ரன்வே!. பிரதமர் மோடி திறந்து வைத்தார்!.
    இந்தியா

    அசாம் சாலையில் விமானம் தரையிறங்க அவசர ரன்வே!. பிரதமர் மோடி திறந்து வைத்தார்!.

    Editor web3By Editor web3February 14, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    assam runway
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அசாமின் மோரான் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்ட அவசர தரையிறங்கும் வசதியில் பிரதமர் நரேந்திர மோடி பயணித்த விமானம் சனிக்கிழமை காலை தரையிறங்கியது. மாநில உள்கட்டமைப்பு வரலாற்றில் முக்கிய மைல்கல்லாக கருதப்படும் இந்த நிகழ்வு முதன்முறையாக நடைபெற்றது. அவசர காலங்களில் இந்திய விமானப்படை போர் விமானங்கள் புறப்படவும் தரையிறங்கவும் ஏதுவாக இந்த சிறப்பு வசதி உருவாக்கப்பட்டுள்ளது.

    அசாம் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் சூழ்நிலையில் ஒரு நாள் பயணமாக சென்ற பிரதமர், இந்த வசதியை திறந்து வைத்தார். தொடர்ந்து இந்திய விமானப்படையின் 40 நிமிட வான்வழி காட்சியையும் பார்வையிட்டார். மேலும் ரூ.5,500 கோடிக்கும் மேற்பட்ட மேம்பாட்டு திட்டங்களையும் தொடங்கி வைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக சாபுவா விமான நிலையம் வந்த பிரதமரை மாநில ஆளுநர் மற்றும் முதல்வர் வரவேற்றனர். அங்கிருந்து இந்திய விமானப்படையின் C-130J விமானத்தில் மோரான் நெடுஞ்சாலை பகுதிக்கு சென்றார். ரூ.100 கோடி செலவில் 4.2 கிலோமீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்ட இந்த வசதி வடகிழக்கு பிராந்தியத்தில் முதல்முறையாக உருவாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த அவசர விமான இறங்கும் தளம், வடகிழக்கு இந்தியாவில் முதன்முறையாக உருவாக்கப்பட்டதாகும். இது இந்திய விமானப் படை உடன் இணைந்து வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளது. அவசர காலங்களில் இராணுவ மற்றும் குடிமக்கள் விமானங்கள் தரையிறங்கவும், புறப்படவும் ஏற்ற வகையில் இந்த வசதி உருவாக்கப்பட்டுள்ளது.

    இயற்கை பேரிடர்கள் அல்லது மூலோபாய தேவைகள் நேரும் போது, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை விரைவாக மேற்கொள்ள இது மிக முக்கியமான வசதியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleடி20 உலகக் கோப்பையில் அதிகபட்ச ஸ்கோர்!. வரலாறு படைத்தது அயர்லாந்து!. 
    Next Article ரூ.5000 எதிரொலி!. இனி ஆட்சியில் பங்குவேண்டும் என காங்., கட்சியினர் கேட்கமாட்டார்கள்!. ஆர்.எஸ்.பாரதி!.
    Editor web3
    • Website

    Related Posts

    மகளிர் இடஒதுக்கீடு மசோதா அரசியல் ஆதாயமே!. கார்கே விமர்சனம்!

    April 12, 2026

    பழம்பெரும் பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!. திரையுலகினர் இரங்கல்!.

    April 12, 2026

    வேட்பாளர்கள் மீது அதிருப்தி?. வரும் 16-ல் விஜய் தலைமையில் ஆலோசனை கூட்டம்!. 

    April 12, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஒரே நாளில் ஆசியாவை உலுக்கிய நிலநடுக்கங்கள்!. மியான்மர் முதல் ஆப்கான் வரை குலுங்கிய பூமி!.

    மகளிர் இடஒதுக்கீடு மசோதா அரசியல் ஆதாயமே!. கார்கே விமர்சனம்!

    பழம்பெரும் பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!. திரையுலகினர் இரங்கல்!.

    “இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்”!. செங்கோட்டையன் பேச்சால் தவெக தொண்டர்கள் அதிர்ச்சி!

    ஸ்டாலின் டெல்டாகாரர் அல்ல.. உல்டாகாரர்!. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!.

    Trending Posts

    மகளிர் இடஒதுக்கீடு மசோதா அரசியல் ஆதாயமே!. கார்கே விமர்சனம்!

    April 12, 2026

    பழம்பெரும் பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!. திரையுலகினர் இரங்கல்!.

    April 12, 2026

    “இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்”!. செங்கோட்டையன் பேச்சால் தவெக தொண்டர்கள் அதிர்ச்சி!

    April 12, 2026

    ஸ்டாலின் டெல்டாகாரர் அல்ல.. உல்டாகாரர்!. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!.

    April 12, 2026

    வேட்பாளர்கள் மீது அதிருப்தி?. வரும் 16-ல் விஜய் தலைமையில் ஆலோசனை கூட்டம்!. 

    April 12, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.