தென் கொரிய நிறுவனமான சாம்சங் நிறுவனத்தின் இரண்டாவது பெரிய உற்பத்தி ஆலை இந்தியாவில் உள்ளது. அங்கே ஸ்மார்ட் போன்கள் மட்டுமின்றி தொலைக்காட்சி, குளிர்சாதனப் பொருள் என ஒரு சில வீட்டு உபயோக பொருட்களும் இங்கு தயாராகி வருகின்றன. இந்தியாவில் தயாராகும் சாம்சங் பொருட்கள் 70க்கும் மேற்பட்ட நாடுகளில் ஏற்றுமதி ஆகி வருகிறது.

இந்தியாவில் உள்ள உற்பத்தியாளையில் தயாரிக்கப்படும் சாம்சங் பொருட்களின் ஏற்றுமதி ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளை விட இந்த ஆண்டு இந்தியாவில் உற்பத்தியான சாம்சங் பொருட்கள் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டது மட்டுமல்லாமல் samsung நிறுவனத்திற்கு மிகப்பெரிய வருவாயும் ஈட்டி கொடுத்துள்ளது.

இந்திய உற்பத்தி ஆலையில் உற்பத்தி செய்யப்படும் சாம்சங் பொருட்களின் ஏற்றுமதி வருவாய் :

நிதியாண்டு 2023 : 37,486.5 கோடி

நிதியாண்டு 2024 : 36,842.3 கோடி

நிதியாண்டு 2025 : 45,930 கோடி

சாப்ட்வேர் சம்பந்தமான ஏற்றுமதி வருவாயிலும் சாம்சங் நிறுவனம் கடந்த ஆண்டை (1,881.4 கோடி ) விட, இந்த ஆண்டு அதிக வருவாயை (2,274.2 கோடி ) ஈட்டி உள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளை விட இந்த ஆண்டு அதிக அளவில் சாம்சங் நிறுவனப் பொருட்கள் இந்தியாவிலிருந்து ஏற்றுந்து செய்யப்பட்ட நிலையில், இந்தியாவில் உள்ள உற்பத்தி ஆலையை சாம்சங் நிறுவனம் விரிவுபடுத்தப் போகிறது. இந்தியாவில் உள்ள சாம்சங் உற்பத்தி ஆலையில் மொத்தம் 70000 மேற்பட்ட பொறியாளர்கள் வேலை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் உற்பத்தியாகும் samsung ஸ்மார்ட் போன்கள் சைனா, ஐரோப்பா கண்டம் , சவுதி, அரேபியா, தென்கொரியா, வியட்நாம் ஆகிய பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதே சமயம் வீட்டு உபயோக பொருட்கள் பெருமளவில் தென்கொரியாவுக்கும் ஆப்பிரிக்காவிற்கும் ஆசியாவில் உள்ள அண்டை நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version