ஹரியானாவில் டென்னிஸ் வீராங்கனையை சுட்டுக் கொன்ற அவரது தந்தை கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியை சேர்ந்தவர் ராதிகா யாதவ். 25 வயதான அவர், டென்னிஸ் வீராங்கனை ஆவார். மாநில அளவில் பல போட்டிகளில் கலந்து கொண்டு பல பதக்கங்களை பெற்றுள்ளார். இன்று மதியம் ராதிகாவை அவரது தந்தை துப்பாக்கியால் 5 முறை சுட்டதில், 3 குண்டுகள் அவர் மீது பாய்ந்தது.
தகவலறிந்து வந்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணயில், ராதிகா இன்ஸ்டாகிராம் மூலம் ரீல்ஸ் போடுவதை முழு நேரமாக செய்து வந்ததாகவும், இதனால் தந்தை-மகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அவரது தந்தை, துப்பாக்கியால் மகளை சுட்டுக் கொன்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
