காசா பற்றி கவலைப்படுபவர்கள், வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு ஏற்படும் கொடுமைகள் குறித்து கண்டுகொள்ளாமல் இருப்பது கபடநாடகம் என சினிமா பிரபலங்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
வங்கதேசத்தில் கடந்த வாரம் நடைபெற்ற வன்முறையில் திபு சந்திரதாஸ் (30) என்ற இந்து தொழிலாளி அடித்துக் கொல்லப்பட்டு எரிக்கப்பட்டார்.
நடிகை காஜல் அகர்வால் விடுத்துள்ள செய்தியில், ‘‘ வங்கதேசத்தில் மத தீவிரவாதத்தால் அச்சத்தில் வாழும் இந்து சிறுபான்மையினருக்கு துணை நிற்க வேண்டும்’’ என குறிப்பிட்டுள்ளார்.
