Close Menu
    What's Hot

    மீண்டும் திமுக ஆட்சிதான்!. பேரவையில் செல்வப்பெருந்தகை பேசியது என்ன?

    ஏஐ மாநாட்டில் ரோபோ நாய்; சீனா நம்மை கேலி செய்கிறது!. ராகுல் காந்தி கண்டனம்!

    வெல்லும் தமிழ்ப் பெண்கள்!. பிப்.23 முதல் வீடு வீடாக பிரசாரம்! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»நீதிமன்றத்தில் ஆஜரான 5 ஐஏஎஸ் அதிகாரிகள்…
    இந்தியா

    நீதிமன்றத்தில் ஆஜரான 5 ஐஏஎஸ் அதிகாரிகள்…

    Editor TN TalksBy Editor TN TalksJuly 10, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    201903080135128476 Womens Day Special Exclusive interview with P Amutha IAS SECVPF
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பாஜக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 5 ஐ ஏ எஸ் அதிகாரிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.

    கடலூர் மாவட்டம் கூத்தப்பாக்கம் கிராமத்தில் உள்ள தேவநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான 3.40 ஏக்கர் நிலத்தில், அமைந்துள்ள தனியார் பள்ளியை அதாவது புனித ஜோசப் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியை அப்புறப்படுத்தக் கோரி பாஜகவின் ஆன்மீக மற்றும் கோவில் மேம்பாட்டுப் பிரிவின் மாநில செயலாளர் வினோத் ராகேந்திரன் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த வழக்கு விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பள்ளியை அப்புறப்படுத்தி, நிலத்தை கோவிலுக்கு ஒப்படைக்க வேண்டும் எனவும், பள்ளிக்கு மாற்று இடம் ஒதுக்க வேண்டும் என கடந்த 2024 ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது.

    இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக்கூறி தமிழக வருவாய் துறை செயலாளர் அமுதா, பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மதுமதி, இந்து சமய அறநிலைய துறை செயலாளர் சந்திரமோகன், அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர், கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார், அறநிலைய துறை இணை ஆணையர் பரணிதரன், கோவில் செயல் அலுவலர் வெங்கடகிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராக வினோத் ராகவேந்திரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தார்.

    இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 5 ஐ ஏ எஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அரசு அதிகாரிகளை நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டிருந்தது.

    இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஆர் ஸ்ரீராம்,மற்றும் நீதிபதி சுந்தர்மோகன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, தமிழக வருவாய் துறை செயலாளர் அமுதா, பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மதுமதி, இந்து சமய அறநிலைய துறை செயலாளர் சந்திரமோகன், அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர், கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார், அறநிலைய துறை இணை ஆணையர் பரணிதரன், கோவில் செயல் அலுவலர் வெங்கடகிருஷ்ணன் ஆகியோர் நேரில் ஆஜராகி இருந்தனர். அவர்கள் தரப்பில், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாததற்கு மன்னிப்பு கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ ரவீந்திரன், புவனகிரி தாலுகா பெரியப்பட்டு கிராமத்தில் பள்ளிக்கு 4.73 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

    32 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள அந்த இடத்தில் சாலை வசதி ஏதுமில்லை என்றும், குவாரிகள் இயங்குகின்றன என்றும் பள்ளித்தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. மேலும் கடலூர் நகரில் 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் நிலம் ஒதுக்கி தர வேண்டுமென பள்ளி நிர்வாகம் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இதற்கு பதில் அளித்த தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர், பிரதான சாலையிலிருந்து குறிப்பிட்ட அந்த நிலத்திற்கு செல்ல சாலை வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

    இதையடுத்து, பள்ளிக்கு வேறு இடம் ஒதுக்கக்கோரி அரசுக்கு விண்ணப்பிக்கும் படி பள்ளி நிர்வாகத்திற்கு அறிவுறுத்திய நீதிபதிகள், அதனை பரிசீலிக்கும்படி வருவாய்த்துறை செயலாளர் உத்தரவிட்டு, அதிகாரிகளின் மன்னிப்பை ஏற்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅண்ணாமலை பல்கலை. தற்காலிக பணியாளர்கள் நிரந்தரமாக்கப்படுவது எப்போது?
    Next Article வேதாரண்யத்தில் ஊராட்சி செயலாளர் தூக்கிட்டுத் தற்கொலை
    Editor TN Talks

    Related Posts

    ஏஐ மாநாட்டில் ரோபோ நாய்; சீனா நம்மை கேலி செய்கிறது!. ராகுல் காந்தி கண்டனம்!

    February 18, 2026

    இந்தியாவுக்கு நான் எப்போது வருவேன் என தெரியாது!. விஜய் மல்லையா!

    February 18, 2026

    ஆன்லைனில் வாடகை வீடு தேடுகிறீர்களா? சைபர் குற்றவாளிகளின் வலையில் சிக்கி பணத்தை இழந்த மருத்துவர்!. 

    February 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மீண்டும் திமுக ஆட்சிதான்!. பேரவையில் செல்வப்பெருந்தகை பேசியது என்ன?

    ஏஐ மாநாட்டில் ரோபோ நாய்; சீனா நம்மை கேலி செய்கிறது!. ராகுல் காந்தி கண்டனம்!

    வெல்லும் தமிழ்ப் பெண்கள்!. பிப்.23 முதல் வீடு வீடாக பிரசாரம்! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!

    இந்தியாவுக்கு நான் எப்போது வருவேன் என தெரியாது!. விஜய் மல்லையா!

    தேர்தல் பரபரப்பு!. மார்ச்-ல் அடுத்தடுத்து 3 முறை தமிழகம் வரும் பிரதமர் மோடி!. திருச்சி, தஞ்சை டார்கெட்!

    Trending Posts

    மீண்டும் திமுக ஆட்சிதான்!. பேரவையில் செல்வப்பெருந்தகை பேசியது என்ன?

    February 18, 2026

    ஏஐ மாநாட்டில் ரோபோ நாய்; சீனா நம்மை கேலி செய்கிறது!. ராகுல் காந்தி கண்டனம்!

    February 18, 2026

    வெல்லும் தமிழ்ப் பெண்கள்!. பிப்.23 முதல் வீடு வீடாக பிரசாரம்! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!

    February 18, 2026

    இந்தியாவுக்கு நான் எப்போது வருவேன் என தெரியாது!. விஜய் மல்லையா!

    February 18, 2026

    தேர்தல் பரபரப்பு!. மார்ச்-ல் அடுத்தடுத்து 3 முறை தமிழகம் வரும் பிரதமர் மோடி!. திருச்சி, தஞ்சை டார்கெட்!

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.