கேராளாவின் பாலக்காட்டை சேர்ந்தவர் செவிலிய்லர் நிமிஷா பிரியா (36). இவ்ர் மேற்காசிய நாடான ஏமனில் செவிலியராக பணியாற்றி வந்தார். கடந்த 2014-ம் ஆண்டு அவரது கணவர் மற்றும் பெண் குழந்தை இந்தியாவிற்கு திரும்பினர். அதே ஆண்டு ஏமனில் உள்நாட்டு போர் ஏற்பட்டதால், நிமிஷாவால் நாடு திரும்ப முடியவில்லை.
தொடர்ந்து அங்கேயே செவிலியராக நிமிஷா வேலை பார்த்து வந்த நிலையில், 2017-ம் ஆண்டு அந்நாட்டை சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்பவரை கொலை செய்த குற்றச்சாட்டில் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. அது முதல் தற்போது வரை அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது மேல்முறையீட்டு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன. அவரை காப்பாற்ற அவரது தாய் போராடி வருகிறார். ஏமன் நாட்டு சட்டப்படி, இறந்தவரின் குடும்பத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி மன்னிப்பு கேட்டு, அவர்கள் கேட்கும் பணத்தை நஷ்ட ஈடாக வழங்க வேண்டும்.
பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் மன்னிப்பு வழங்கினால், குற்றவாளியின் தண்டனை தள்ளுபடி செய்யப்படும் என்ற வழக்கம் உள்ளது. இதனை பயன்படுத்தி நிமிஷா பிரியாவை காப்பாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் வரும் 16-ம் தேதி நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது. இதனை நிமிஷா தயாரின் வழக்கறிஞராக செயல்பட்டு வந்த சாமுவேல் ஜெரோம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்தது : நேற்று, சிறைத்துறை தலைவரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அப்போது, நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கான உத்தரவு வந்துவிட்டதாக தெரிவித்தார். இது அவரிடமும் தெரிவிக்கப்பட்டு விட்டது. தண்டனை நிறைவேற்றப்படும் தேதி குறித்து மத்திய வெளியுறவத்துறை அமைச்சகத்திடம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துடன் பேச்சு நடந்தாலும் அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. தேவையான நிதி திரட்ட முயற்சிகள் மேற்கொண்டோம் எனத் தெரிவித்துள்ளார்.