Close Menu
    What's Hot

    போர் எதிரொலி!. மே 31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!. இஸ்ரேலில் 40,000 இந்தியர்கள் தவிப்பு!

    “இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»மயிலாடுதுறை எம்.பி., சுதாவிடம் நகை பறித்தவர் கைது… நகைகள் மீட்கப்பட்டதாக தகவல்…
    இந்தியா

    மயிலாடுதுறை எம்.பி., சுதாவிடம் நகை பறித்தவர் கைது… நகைகள் மீட்கப்பட்டதாக தகவல்…

    Editor TN TalksBy Editor TN TalksAugust 6, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    11 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    டெல்லியில் மயிலாடுதுறை எம்.பி., சுதாவிடம் நகைகளை பறித்தவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மயிலாடுதுறை எம்.பி., சுதா, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 21-ம் தேதி தொடங்கியது. இதில் கலந்து கொள்வதற்காக டெல்லியில் முகாமிட்டுள்ளார் எம்.பி., சுதா. கடந்த 4-ம் தேதி நாடாளுமன்ற குடியிருப்புப் அருகே சுதா நடைபயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

    அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர், சுதா அணிந்திருந்த தங்க செயினை பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், மர்ம நபரிடம் இருந்து செயினை காக்க போராடியும் முடியவில்லை. அந்நபர் சுதாவை தாக்கி அவர் அணிந்திருந்த 4.5சவரன் செயினை பறித்துச் சென்றார். இதில் எம்.பி., சுதாவுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

    இது குறித்து அவர் சாணக்யபுரி காவல்நிலையத்தில் புகார் அளிக்க, அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த சூழலில், செயின் பறிப்பு சம்பவம் தொடர்பாக எம்.பி., சுதா, உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு மின்னஞ்சல் வாயிலாக கடிதமும் அனுப்பினார். அந்தக் கடிதத்தில்,

    “செயின் பறிப்பில் ஈடுபட்ட நபரை விரைவாக கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும். ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் தங்கச் சங்கிலியை பறித்து சென்ற போது என்னுடைய கழுத்தில் காயம் ஏற்பட்டது. உயர் பாதுகாப்பு மண்டலத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் மர்மநபரை பிடிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று வலியுறுத்தி இருந்தார்.

    இந்நிலையில் மயிலாடுதுறை எம்.பி. சுதாவிடம் நகையை பறித்துச் சென்ற குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் திருடி சென்ற 4.5 சவரன் தங்க நகையையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

    இதுதொடர்பாக டெல்லி போலீசாரின் தங்களது எக்ஸ் வலைதளத்தில், “நாடாளுமன்ற உறுப்பினரின் சங்கிலியைப் பறித்த வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டு செயின் மீட்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்கள் விரைவில் பகிரப்படும்” என்று பதிவிடப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிருப்பூர் சிறப்பு எஸ்.ஐ. வெட்டிக் கொலை… ரூ.1கோடி நிதியுதவி அறிவித்த மு.க.ஸ்டாலின்…
    Next Article திமுகவில் இணைந்த அதிமுக மாஜி எம்.எல்.ஏ., கார்த்தி தொண்டைமான்…
    Editor TN Talks

    Related Posts

    போர் எதிரொலி!. மே 31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!. இஸ்ரேலில் 40,000 இந்தியர்கள் தவிப்பு!

    April 6, 2026

    உலகளாவிய சவால்களை முறியடித்து இந்தியா சாதனை!. ஜெய்சங்கர் பெருமிதம்!

    April 6, 2026

    இலவச கார் பயணம், அல்வா, ரூ.1க்கு அரிசி மாவு!. தேர்தல் ஆணையத்தின்  கவர்ச்சி அறிவிப்புகள்!.

    April 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    போர் எதிரொலி!. மே 31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!. இஸ்ரேலில் 40,000 இந்தியர்கள் தவிப்பு!

    “இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிறைவு!. நாளை முதல் கோடை விடுமுறை!. மாணவர்கள் உற்சாகம்!

    வானதி அறிமுக கூட்டத்தில் அண்ணாமலை மிஸ்ஸிங்!. “கோவையிலேயே இருந்தும் வராதது ஏன்?. சலசலப்பு!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.