பீகாரை தொடர்ந்து சட்ட மன்ற தேர்தலை எதிர்கொள்ள உள்ள தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்குவங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து, அந்தந்த மாநிலங்களில் விரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டன. இதில் கோடிக்கணக்கில் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டன.
அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 2.89 கோடி பேர் நீக்கப்பட்டன. இதேபோல் தமிழகத்திலும், தமிழகத்தில் 97.38 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். மேற்கு வங்கத்தில் 58 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டனர். இந்த எஸ் ஐ ஆர் பணிகளுக்கு ஆரம்பம் முதலே தமிழ்நாடு, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியது. இருப்பினும், தேர்தல் ஆணையம் அப்பணியை மேற்கொண்டது.
இந்தநிலையில், ஏ.ஐ. பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் பணி மேற்கொள்ளப்படுகிறது. இது மிகப்பெரிய மோசடி என்று மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, பங்குராவில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு பேசிய அவர், மேற்கு வங்கத்தில் பாஜக-வை ஆட்சிக்கு வர மக்கள் அனுமதிக்கக் கூடாது.
தேர்தல் வரும் நிலையில் சோனார் பங்க்ளா (Sonar Bangla) வாக்குறுதியை கொடுத்தார்கள். ஆனால், பெங்காலி பேசும் மக்கள் மற்ற மாநிலங்களில் தாக்கப்படுகிறார்கள். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின்போது மேற்கு வங்கத்தில் சுமார் 60 பேர் உயிரிழந்துள்ளனர். SIR என்ற பெயரில் மக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் என்று பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
