நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாகாலாந்து மாநில ஆளுநராக பணியாற்றி வரும் இல.கணேசன்(80), இதற்கு முன்னதாக மணிப்பூர் மாநில ஆளுநராகவும், மேற்கு வங்க மாநில ஆளுநராகவும் பணியாற்றியுள்ளார்.
பாஜகவில் மாநிலத் தலைவர், தேசிய செயலாளர், தேசிய துணைத் தலைவர் உட்பட பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர் இல.கணேசன். நாடாளுமன்ற உறுப்பினராகவும் செயல்பட்டுள்ளார். இந்த நிலையில்,
இல.கணேசனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பலோவில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். அண்மையில் இல.கணேசனின் சகோதரர் இல.கோபாலன் வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் காலாமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
