GST 2.O : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய ஜிஎஸ்டி 2.0 வரியை அறிவித்துள்ளார். ஜிஎஸ்டி அமலுக்கு வந்து 8 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் ஜிஎஸ்டி வரியை குறைக்க மத்திய அரசு முடிவு செய்தது. ஏற்கெனவே இருந்த ஜிஎஸ்டி வரியில் மாற்றங்கள் செய்யப்பட்டு இனி ஜிஎஸ்டி வரி 5%, 18% ஆக மட்டுமே இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது என்பதை பார்ப்போம்.

திருத்தப்பட்ட ஜிஎஸ்டி வரி

பான் மசாலா, குட்கா, ஜர்தா, கார்பனேட்டட் குளிர்பானங்கள், சோடா போன்றவற்றின் ஜிஎஸ்டி 40% ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஏசி, டிவி, அனைத்து வகையான மோட்டார் வாகனங்கள், சிமெண்ட், புரொஜெக்டர் மீதான ஜிஎஸ்டி வரி 18% ஆக உள்ளது.

தையல் எந்திரம், நாப்கின், பாஸ்தா, டூல்ஸ், பதப்படுத்தப்பட்ட் இயந்திரம், வெண்ணெய் மீதான ஜிஎஸ்டி 12% இருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

ஹேர் ஆயில், ஷாம்பு, பல் துலக்கும் பிரஷ், சைக்கிள், சமயலறை பாத்திரங்கள் மீதான ஜிஎஸ்டி 5% ஆக உள்ளது.

வெண்ணெய், பால் பொருட்கள், குழந்தைகள் நாப்கின், தையல் உபகரணங்களின் ஜிஎஸ்டி 5% ஆக உள்ளது.

டிராக்டர், விவசாய உபகரணங்கள், பேண்டேஜ் போன்ற மருத்துவ உபகரணங்கள், மூக்கு கண்ணாடி, ஷேம்பு, சோப்பு மீதான ஜிஎஸ்டி 5% ஆக உள்ளது.

12 வகையான உயிர் பூச்சிக் கொல்லிகள், உரத்திற்கான மூலப்பொருளின் மீதான ஜிஎஸ்டி 5% ஆக உள்ளது.

பார்வையை சரிசெய்யும் கண்ணாடிகள் மற்றும் கண் கண்ணாடிகளும் 28 சதவீதத்தில் இருந்து 5 ஆக குறைக்கப்படுகின்றன.

350 சிசி பைக், சொகுசு கார்கள், தனியார் விமானங்களின் ஜிஎஸ்டி 40% ஆக உள்ளது.

ஜிஎஸ்டி இல்லாத பொருட்கள்

33 உயிர் காக்கும் மருந்துகள் மீதான ஜிஎஸ்டி வரி 12% இருந்து பூஜ்ஜியமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தனி நபர்கள், குடும்பங்களின் மருத்துவ காப்பீட்டுக்கு ஜிஎஸ்டி கிடையாது

பென்சில், அழிப்பான், புத்தகங்கள், மேப், சார்ட், கலர் பென்சில்கள் போன்ற பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் மாற்றம் செய்யப்பட்ட புதிய ஜிஎஸ்டி வரிகள் செப்டம்பர் 22ம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளன.

Share.
Leave A Reply

Exit mobile version