Close Menu
    What's Hot

    “இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிறைவு!. நாளை முதல் கோடை விடுமுறை!. மாணவர்கள் உற்சாகம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»விமான துறையில் தாராளமயமாக்கல் இல்லாததே இண்டிகோ பிரச்சினைக்கு காரணம்: ப.சிதம்பரம்
    இந்தியா

    விமான துறையில் தாராளமயமாக்கல் இல்லாததே இண்டிகோ பிரச்சினைக்கு காரணம்: ப.சிதம்பரம்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 6, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    pcs
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்திய விமான துறையில் தாராளமயமாக்கல் இல்லாததே விமான நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு அடிப்படை என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

    இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் கடந்த சில நாட்களாக விமானப் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், இந்த பிரச்சினையின் அடிப்படை குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ப. சிதம்பரம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஒரு துறையில் ஒரு நிறுவனம் மட்டுமோ அல்லது இரண்டு நிறுவனங்கள் மட்டுமோ ஆதிக்கம் செலுத்துவது இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்குப் பொருந்தாது. இதை ராகுல் காந்தி சரியாக சுட்டிக்காட்டியுள்ளார்.

    இந்திய பொருளாதாரத்தில் பல துறைகளில் இரண்டு நிறுவனங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் போக்கு இருக்கிறது. இதில், விமானத்துறையும் ஒன்று.

    தாரளமயமாக்கலும் திறந்த பொருளாதாரமும் போட்டியை அடிப்படையாகக் கொண்டவை. போட்டி இல்லாவிட்டால், நாம் தற்போது காண்பது போன்ற மோசமான விளைவுகள்தான் ஏற்படும்.

    இந்தியாவில் துடிப்பானதாகவும் போட்டிகள் கொண்டதாகவும் இருந்த விமானத் துறை, எவ்வாறு இரண்டு நிறுவனங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் துறையாக மாறிப் போனது என்பது குறித்து மக்கள் சிந்திக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

    முன்னதாக இந்த விவகாரம் குறித்து நேற்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட ராகுல் காந்தி, “பாஜக தலை​மையி​லான மத்​திய அரசு, ஏகபோக​மாக ஒரு நிறு​வனத்​தின் ஆதிக்​கத்​தில் விட்​டதன் விளைவு​தான் இது. அதனால் விமானங்​கள் ரத்​து, தாமதம் என அப்​பாவி மக்​கள் பாதிக்கப்​படு​கின்​றனர்.

    அப்​பாவி மக்​கள் அதற்​கான விலையை கொடுக்​கின்​றனர். நாட்​டில் எந்த துறை​யாக இருந்​தா​லும், ஆரோக்​கிய​மான போட்டி இருக்க வேண்​டும். ஒரு நிறு​வனமே ஆதிக்​கம் செலுத்​தும் வகை​யில் இருக்க கூடாது. இதில் மேட்ச் பிக்சிங் இருக்க கூடாது” என தெரிவித்திருந்தார்.

     

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleயு.ஜி.சியின் மறைமுக இந்தித் திணிப்பை ஏற்கக் கூடாது… அன்புமணி அறிக்கை
    Next Article அமெரிக்க அதிபர் டிரம்புக்கு அமைதிக்கான பரிசு! ஃபிபா கவுரவம்
    Editor TN Talks

    Related Posts

    உலகளாவிய சவால்களை முறியடித்து இந்தியா சாதனை!. ஜெய்சங்கர் பெருமிதம்!

    April 6, 2026

    இலவச கார் பயணம், அல்வா, ரூ.1க்கு அரிசி மாவு!. தேர்தல் ஆணையத்தின்  கவர்ச்சி அறிவிப்புகள்!.

    April 5, 2026

    ரூ.167 கோடிக்கு ஏலம் போன ஓவியம்!. புதிய உலக சாதனை!

    April 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிறைவு!. நாளை முதல் கோடை விடுமுறை!. மாணவர்கள் உற்சாகம்!

    வானதி அறிமுக கூட்டத்தில் அண்ணாமலை மிஸ்ஸிங்!. “கோவையிலேயே இருந்தும் வராதது ஏன்?. சலசலப்பு!

    அணிக்கு திரும்பும் தல தோனி!. தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா சிஎஸ்கே?

    Trending Posts

    அடுத்த முதல்வராக ஸ்டாலின் வரவே முடியாது!. பியூஷ் கோயல் பேட்டி!

    April 6, 2026

    வீடியோ காலில் கணவருடன் வாக்குவாதம்!. சென்னையில் சின்னத்திரை நடிகை தற்கொலை!

    April 6, 2026

    தமிழக எம்.பி.க்கள் 6 பேர் பதவியேற்பு!. முதல்முறையாக நாடாளுமன்றம் சென்ற சுதீஷ்!

    April 6, 2026

    தமிழ்நாடு தேர்தல்!. இன்று பிற்பகல் 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு!.

    April 6, 2026

    “இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!

    April 6, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.