இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பிரேசில் ஜனாதிபதி லுலா ட சில்வா அழைப்பின்பேரில் பிரேசில் தலைநகர் பிரேசிலியாவுக்கு செல்கிறார். இது, அவர் மேற்கொண்டுள்ள ஐந்து நாடுகள் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாகும். இந்த சுற்றுப்பயணத்தில் கானா, டிரினிடாட் அண்டு டுபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியா ஆகிய நாடுகள் அடங்கும்.
தற்போதுவரை, பிரதமர் மோடி கானா மற்றும் டிரினிடாட் அண்டு டுபாகோ ஆகிய இரு நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் அந்தந்த நாடுகளின் தலைவர்களைச் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புகளின்போது, அவருக்கு இரு நாடுகளிலும் அந்தந்த நாடுகளின் உயரிய விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. இது இந்தியாவின் சர்வதேச உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்தது.
கானா மற்றும் டிரினிடாட் அண்டு டுபாகோ பயணங்களை முடித்துக்கொண்ட பிரதமர் மோடி, அடுத்ததாக அர்ஜென்டினாவுக்கு புறப்பட்டுச் சென்றார். அர்ஜென்டினாவின் எஜீஜா சர்வதேச விமான நிலையத்தில், அவருக்கு பாரம்பரிய முறைப்படி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அர்ஜென்டினாவில் தனது சந்திப்புகளை முடித்துக்கொண்டு, பிரேசில் மற்றும் நமீபியாவுக்கு அவர் செல்லவுள்ளார்.
இந்த ஐந்து நாடுகளின் சுற்றுப்பயணம், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.