Close Menu
    What's Hot

    அதிமுகவிடம் 60 தொகுதிகளை கேட்கும் பாஜக… இபிஎஸ்சுடன் பியூஷ் கோயல் பேச்சு

    சென்னை – தூத்துக்குடிக்கு ரூ.13,400! 3 மடங்கு உயர்ந்த விமானக் கட்டணம்

    விஜய்யும், சீமானும் ஆர்எஸ்எஸ்சின் கையாட்கள்! புட்டு புட்டு வைத்த திருமாவளவன்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»பிரதமர் மோடியின் 8 நாள் வெளிநாட்டுப் பயணம்: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பு, 5 நாடுகளுடன் உறவு மேம்பாடு!
    இந்தியா

    பிரதமர் மோடியின் 8 நாள் வெளிநாட்டுப் பயணம்: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பு, 5 நாடுகளுடன் உறவு மேம்பாடு!

    Editor TN TalksBy Editor TN TalksJuly 2, 2025Updated:July 2, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    IMG 20250702 WA0000
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பிரதமர் நரேந்திர மோடி இன்று முதல் ஜூலை 9 ஆம் தேதி வரை எட்டு நாட்கள் வெளிநாட்டுப் பயணத்தை தொடங்கியுள்ளார். இது கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நீண்டகால பயணமாக அமைந்துள்ளது. இந்த பயணத்தில் அவர் ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்கா கண்டங்களில் உள்ள ஐந்து நாடுகளுக்குச் செல்கிறார்.

    இந்தியாவுக்கும் உலகளாவிய தென் பகுதிகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்தப் பயணம் மேற்கொள்ளப்படுகிறது.

    பயணத் திட்டம்:

    கானா (ஜூலை 2 & 3): கடந்த 30 ஆண்டுகளில் கானாவுக்குச் செல்லும் முதல் இந்தியப் பிரதமர் மோடி ஆவார். இது இவருக்குமான முதல் கானா பயணம்.

    டிரினிடாட் அண்ட் டொபாகோ (ஜூலை 3 & 4): இங்கு அந்நாட்டு நாடாளுமன்றக் கூட்டுக்கூட்டத்தில் பிரதமர் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அர்ஜென்டினா:

    பிரேசில் (ஜூலை 5 – 8): பிரேசில் அதிபர் லூலா டா சில்வாவின் அழைப்பின் பேரில் நடைபெறும் 17வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இந்த மாநாட்டில் அமைதி, பாதுகாப்பு, பலதரப்பு உறவுகளை வலுப்படுத்துதல், பொறுப்பான செயற்கை நுண்ணறிவு பயன்பாடு, காலநிலை மாற்றம், உலகளாவிய சுகாதாரம், பொருளாதாரம் மற்றும் நிதி விவகாரங்களில் இந்தியாவின் நிலைப்பாடுகளை அவர் முன்வைப்பார். மாநாட்டின் ஒரு பகுதியாகப் பல இருதரப்பு சந்திப்புகளையும் பிரதமர் மேற்கொள்வார்.

    நமீபியா:

    தனது பயணத்தின் இறுதிக் கட்டமாக நமீபியா செல்லும் பிரதமர், அந்நாட்டு அதிபர் நந்தி தைத்வாவைச் சந்தித்துப் இருதரப்பு உறவுகள் குறித்துப் பேசுவார். நமீபிய நாடாளுமன்றத்தில் கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

     

    பிரதமர் மோடி ஐந்து நாடுகளுக்குச் செல்வது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்பு 2016 ஆம் ஆண்டில் அமெரிக்கா, மெக்சிகோ, சுவிட்சர்லாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் கத்தார் ஆகிய ஐந்து நாடுகளுக்கு அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

    இந்த எட்டு நாள் சுற்றுப்பயணம் ஜூலை 9 ஆம் தேதி முடிவடைகிறது. இந்தப் பயணத்தின் மூலம் இந்தியாவின் உலகளாவிய உறவுகள் மேலும் வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Argentina Brazil BRICS Diplomacy Foreign Tour Ghana Global South Namibia Prime Minister Modi Trinidad and Tobago அர்ஜென்டினா இராஜதந்திரம் உலகளாவிய தெற்கு கானா டிரினிடாட் அண்டு டுபாகோ நமீபியா பிரதமர் மோடி பிரிக்ஸ் பிரேசில் வெளிநாட்டுப் பயணம்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசிவகங்கை அஜித்குமார் வழக்கில் காவல்துறையை நோக்கி சரமாரி கேள்வி எழுப்பிய நீதிபதி..
    Next Article பரமக்குடி-ராமநாதபுரம் இடையே ரூ.1,853கோடி மதிப்பில் 4வழி தேசிய நெடுஞ்சாலை… மத்திய அமைச்சரவை ஒப்புதல்…
    Editor TN Talks

    Related Posts

    “என்னை ஏமாத்திட்டாங்க..” விஜய் காரை மறித்து கதறிய பெண்! பரபரப்பான பனையூர்!!

    December 23, 2025

    டெல்லியில் எதிரொலித்த வங்கதேச வன்முறை!. யூனுஸ் உருவ பொம்மை எரித்து போராட்டம்!.

    December 23, 2025

    ராகுல் காந்தி பொய் பிரசாரங்களின் தலைவர்; நாட்டை அவமதிக்கும் கலையில் கைதேர்ந்தவர்!. கடும் விமர்சனம்!

    December 23, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அதிமுகவிடம் 60 தொகுதிகளை கேட்கும் பாஜக… இபிஎஸ்சுடன் பியூஷ் கோயல் பேச்சு

    சென்னை – தூத்துக்குடிக்கு ரூ.13,400! 3 மடங்கு உயர்ந்த விமானக் கட்டணம்

    விஜய்யும், சீமானும் ஆர்எஸ்எஸ்சின் கையாட்கள்! புட்டு புட்டு வைத்த திருமாவளவன்

    “என்னை ஏமாத்திட்டாங்க..” விஜய் காரை மறித்து கதறிய பெண்! பரபரப்பான பனையூர்!!

    கூடங்குளத்தில் ஐயப்ப பக்தர்களின் மண்டல பூஜை விழா

    Trending Posts

    இன்று தமிழகம் வருகிறார் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல்!. EPS உடன் பேச்சுவார்த்தை!.

    December 23, 2025

    கூடங்குளத்தில் ஐயப்ப பக்தர்களின் மண்டல பூஜை விழா

    December 23, 2025

    உலகின் மிகக் கொடூரமான சர்வாதிகாரி!. இந்தியர்களை நாட்டை விட்டு வெளியேற்றிய இடி அமீன்!.

    December 23, 2025

    இந்திய வீராங்கனைகளுக்கு ஜாக்பாட்!. 150% வரை சம்பள உயர்வு!. பிசிசிஐ அதிரடி அறிவிப்பு

    December 23, 2025

    “இந்திய அரசமைப்பை முழுமையாக அப்புறப்படுத்த பாஜக முயற்சி” – பெர்லினில் ராகுல் காந்தி பேச்சு!

    December 23, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.