Close Menu
    What's Hot

    ”ஒவ்வொரு ரன் போலதான் ஒவ்வொரு ஓட்டும்”!. இந்தியாவின் வெற்றியை பிரச்சாரமாக மாற்றிய தேர்தல் ஆணையம்!.

    தங்கம் விலை மளமளவென குறைந்தது!. இன்றைய ரேட் என்ன தெரியுமா?

    அதிர்ச்சியில் அதிமுக!. விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் முன்னாள் எம்எல்ஏ மனோகர்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»ஜனாதிபதி உரை மீதான தீர்மானத்திற்கு பிரதமர் நன்றி உரை!. எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!
    இந்தியா

    ஜனாதிபதி உரை மீதான தீர்மானத்திற்கு பிரதமர் நன்றி உரை!. எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

    Editor web3By Editor web3February 5, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    pm modi speech 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 28ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையடுத்து கடந்த 1-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து 2ம் தேதியில் இருந்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

    இதில் ராகுல் காந்தி பேசும்போது, முன்னாள் ராணுவ தளபதி எம்.எம்.நரவனே எழுதிய ஒரு புத்தகத்தில் இருந்து சீனாவின் ஆக்கிரமிப்பு குறித்த தகவல்களை சுட்டிக்காட்ட விரும்பினார். இதற்கு ஆளுங்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே கடந்த 2 நாட்களாக நாடாளுமன்றத்தில் வார்த்தைப் போர் நீடித்து வருகிறது.

    மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை பேச அனுமதிக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பிரதமர் மோடி நேற்று மாலை 5 மணிக்கு பதிலுரை அளிப்பார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக பிரதமர் மோடியின் பதிலுரை நேற்று ரத்து செய்யப்பட்டது.

    இந்த நிலையில், இன்றும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அவைத் தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டு பதாகைகளுடன் முழக்கங்கள் எழுப்பியதால் பரபரப்பான சூழல் நிலவியது. அமளிக்கு மத்தியில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை குரல் வாக்கெடுப்பு நடத்தி அவைத் தலைவர் ஓம் பிர்லா நிறைவேற்றினார்.  இதையடுத்து, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவையில் இன்று மாலை 5 மணிக்கு பிரதமர் மோடி பதிலுரை ஆற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டது.

    அதன்படி மாலை அவை கூடியதும் பிரதமர் மோடி தனது உரையை தொடங்கினார். அப்போது முழக்கமிட்ட காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். முன்னதாக பிரதமர் மோடியின் பதிலுரையை எதிர்த்து முழக்கமிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் கார்கேவிடம், தனது வயதை கருத்தில் கொண்டு இருக்கையில் அமர்ந்து முழக்கமிடுமாறு பிரதமர் கோரிக்கை விடுத்தார்.

    மேலும் மக்கள் நலனே பிரதானம் என பாஜக கருதுவதால் 3வது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்று செயல்பட்டு வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதூய்மை பணியாளர் காலில் விழுந்து வணங்கிய பார்த்திபன்..! அவள் தான் உலக அழகி என புகழாரம்…
    Next Article பெரும் துயரம்!. நிலக்கரிச் சுரங்கத்தில் பெரும் வெடிவிபத்து!. 10 தொழிலாளர்கள் உயிரிழப்பு!. 
    Editor web3
    • Website

    Related Posts

    ”ஒவ்வொரு ரன் போலதான் ஒவ்வொரு ஓட்டும்”!. இந்தியாவின் வெற்றியை பிரச்சாரமாக மாற்றிய தேர்தல் ஆணையம்!.

    February 16, 2026

    பெரும் எதிர்பார்ப்பில் பிரான்ஸ் அதிபரின் இந்திய பயணம்!. முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!.

    February 16, 2026

    ”வடகிழக்கு மாநிலங்கள் பாஜகவுக்கு அஷ்டலட்சுமி”!. பிரதமர் மோடி!

    February 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ”ஒவ்வொரு ரன் போலதான் ஒவ்வொரு ஓட்டும்”!. இந்தியாவின் வெற்றியை பிரச்சாரமாக மாற்றிய தேர்தல் ஆணையம்!.

    தங்கம் விலை மளமளவென குறைந்தது!. இன்றைய ரேட் என்ன தெரியுமா?

    அதிர்ச்சியில் அதிமுக!. விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் முன்னாள் எம்எல்ஏ மனோகர்!

    ஜெயலலிதா பிறந்தநாளில் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு?. இபிஎஸ் திட்டம்!

    பெரும் எதிர்பார்ப்பில் பிரான்ஸ் அதிபரின் இந்திய பயணம்!. முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!.

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.