நடிகர் சிவகார்த்திகேயனின் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் மற்றும் பேஸன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் நடிகை ராதிகா நடித்துள்ளப் படம் தாய் கிழவி.  இப்படத்தில் ராதிகா 75 வயது மூதாட்டியாக ‘பவுனுத்தாயி’ என்ற மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் பிப்.27ஆம் தேதி வெளியாக உள்ளது.

இப்படத்தில் ராதிகாவின் போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டிருக்கும். அப்போஸ்டரை ரீகிரியேட் செய்து தமிழ்நாடு பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் புதிய போஸ்டர்களை வெளியிட்டுள்ளன.  தேர்தல் நெருங்கும் சூழலில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தாய் கிழவி ராதிகாபோல சித்தரித்து, இயக்கம் ஆர்.எஸ்.எஸ். எனக் குறிப்பிட்டு போஸ்டர் ஒன்றை ஒன்றை வெளியிட்டுள்ளது. லூட்டஸ் புரொடக்ஷன்ஸ்” (Lootus Productions), ஓடுங்க அது நம்மள நோக்கிதான் வருகின்றது போன்ற கிண்டலான வாசகங்களும் இடம் பெற்றுள்ளன.

இதற்குப் பதிலடியாக, பாஜக தரப்பில் சோனியா காந்தியை சித்தரித்து மற்றொரு போஸ்டர் வெளியிடப்பட்டது. அதில் அவர் கையில் துடைப்பம் வைத்திருப்பது போன்றும், 2ஜி ஊழல், போஃபர்ஸ் போன்ற விவகாரங்களைக் குறிப்பிட்டுக் கிண்டல் செய்யும் வாசகங்களும் இடம்பெற்றன. பாஜக தலைவர் எஸ்.ஜி. சூர்யா, சோனியா காந்தியை “அசல் தாய் கிழவி” (Original Thai Kelavi) என்று விமர்சித்துப் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த போஸ்டர்கள் இணையத்தில் வைரலாகி பரவலான கருத்துகளை பதிவிடப்பட்டு வருகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version