நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல்காந்தி மத்திய அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டுவை துரோகி எனக் கூறியதால் சலசலப்பு ஏற்பட்டது.
நாடாளுமன்ற வளாகத்தில் இடைநீக்கம் செய்யப்பட்ட 8 எம்.பிக்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி சிறிது நேரம் அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது மத்திய இணை அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு அந்த பகுதியை கடந்தப் போது, அவரைப் பார்த்து ”இதோ ஒரு துரோகி. பக்கத்திலேயே செல்கிறார்” என்றார்.
தொடர்ந்து “வணக்கம் சகோதரரே எனது துரோகி நண்பரே கவலைப்படாதீர்கள். நீங்கள் மீண்டும் காங்கிரஸுக்கு வருவீர்கள்” என்று கூறியப்படி அவருடன் கை குலுக்க ராகுல் காந்தி முயன்றார். அதற்கு பதிலளித்த இணை அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு, ‘நாட்டின் எதிரி’ எனக் கூறியப்படி ராகுல் காந்தியுடன் கை குலுக்க மறுத்துவிட்டார். இருவரும் கடுமையான வார்த்தைகளை நாடாளுமன்ற வளாகத்தில் பரிமாறிக் கொண்டது சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
