காங்கிரஸ் எம்.பி.யும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, திங்கட்கிழமை (டிசம்பர் 22, 2025) ஜெர்மனியின் பெர்லினுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். ஹெர்டி பள்ளியில் உரையாற்றிய அவர், இந்தியாவில் ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது என்றும் இந்தியாவில் நிறுவனங்கள் செயல்படாத சூழலை பாஜக உருவாக்கியுள்ளது. காங்கிரஸ் அவற்றை தவறாகப் பயன்படுத்தவில்லை, ஆனால் பாஜக தனது அரசியல் அதிகாரத்தை அதிகரிக்க அவற்றைப் பயன்படுத்துகிறது என்று அவர் கூறினார்.
இந்தநிலையில், ராகுல் காந்தி ஆற்றிய உரைக்கு பாரதிய ஜனதா கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாஜக செய்தித் தொடர்பாளர் ஷெஸாத் பூனாவாலா, “நாட்டை அவமதிக்கும் கலையில் ராகுல் காந்தி கைதேர்ந்தவர்” என்று விமர்சித்துள்ளார். ராகுல் காந்தி தன்னை எதிர்க்கட்சித் தலைவர் என்பதை விட, பொய் பிரசாரங்களின் தலைவராகவும், இந்தியாவுக்கு எதிரான சக்திகளின் முகவராகவும் காட்டிக்கொள்வதாக அவர் சாடினார்.
