Close Menu
    What's Hot

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»தங்க நகைக்கடன் – நிபந்தனைகளில் தளர்வு
    இந்தியா

    தங்க நகைக்கடன் – நிபந்தனைகளில் தளர்வு

    Editor TN TalksBy Editor TN TalksJune 7, 2025Updated:June 7, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    images 5 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தங்க நகைக்கடன் தொடர்பாகதான் வெளியிட்ட விதிமுறைகளில் அரசியல் கட்சிகளின் கோரிக்கைகளை ஏற்று மாற்றத்தை அறிவித்துள்ளது. இது இந்திய ரிசர்வு வங்கியின் வரலாற்றிலேயே இது வரை நிகழாத ஒன்று.

    தங்க நகைக்கடன் தொடர்பாக ரிசர்வ் வங்கி பல்வேறு அறிவிப்புகளை கடந்த மாதம் அறிவித்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை எம்.பி. வெங்கடேசன் தனது எக்ஸ தளத்தில் செய்தி ஒன்றை பதிவேற்றி உள்ளார். எங்களது பத்து கோரிக்கைகளையும் ஏற்றுக்கொண்டது ரிசர்வு வங்கி. இந்த வரலாற்றுச்சிறப்பு மிக்க வெற்றிக்கு நன்றி என்று கூறி அந்த 10 விவரங்களை பட்டியலிட்டுள்ளார்.

    தங்க நகை கடன் தொடர்பாக சாமானிய மக்களுக்காக நான் எழுப்பிய கோரிக்கைகளை ரிசர்வ் வங்கி ஏற்றுக்கொண்டு புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.

    1. இந்த விதிமுறைகள் உடனடியாக அமுக்கு வரும். அதிகபட்சமாக 2026 ஏப்ரல் ஒன்றாம் தேதிக்கு முன்பு இந்த விதிமுறைகள் நடைமுறைக்கு வர வேண்டும் என்று ரிசர்வ் வங்கி வரையறுத்துள்ளது.

    2. ரூபாய் 2.5 லட்சம் வரை கடன் பெறுபவர்களுக்கு கடனாளியின் திருப்பி செலுத்தும் திறன் பற்றிய நிபந்தனை கைவிடப்பட்டது.

    3. 2024 செப்டம்பர் 30ஆம் தேதி ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்படி மறுக்கப்பட்ட கடனை புதுப்பித்தல் (renewal) மற்றும் கூடுதல் கடன் (top up) தற்போது வழங்கப்படும்.

    4. அதற்காக புதிதாக கடன் விண்ணப்பம் பரிசீலிக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை. அதாவது கடனை புதுப்பிக்கும் போது அல்லது கூடுதல் கடன் பெறும்போது முந்தைய வழிகாட்டுதல் படி விதிக்கப்பட விருந்த தங்க பரிசீலனை (jewel appraisal) தொகை, கடன் செயல்முறை தொகை (processing fee) எதுவும் புதிதாக விதிக்கப்படாது.

    5. நகைக்கான ரசீது கேட்கப்படாது. பழைய முறைப் படியே கடன் வாங்குபவர்கள் “இந்த நகை என்னுடையது தான்” என்று ஒரு சுய அறிவிப்பு செய்தாலே போதுமானது.

    6. ரூபாய் 2.5 லட்சம் வரை கடனுக்கு நகை மதிப்பில் 85 சதவீதம், 2.5 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை கடன் பெறுபவர்களுக்கு நகை மதிப்பில் 80 சதவீதம், ரூபாய் 5 லட்சத்திற்கு மேல் கடன் பெறுபவர்களுக்கு நகை மதிப்பில் 75% கடன் வழங்கப்படும்.

    7. விவசாய கடன் மற்றும் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் அவசர கடன் வாங்குபவர்கள் எந்த நோக்கத்திற்காக கடன் வாங்குகிறார்களோ அதை உறுதி செய்யும் பொறுப்பு கடன் வழங்கும் நிறுவனங்களைச் சார்ந்தது என்ற சரத்து நீக்கப்பட்டு விட்டது. கடன் வழங்கும் நிறுவனங்கள் கடனாளியின் கணக்கில் தான் கடன் தொகையை செலுத்த வேண்டும். மூன்றாம் நபர் கணக்கிற்கு கடனை வழங்கக் கூடாது.

    8. நகை கடன் முழுவதுமாக செலுத்தப்பட்ட உடனே அன்றைய தினமே நகைகள் கடனாளிகளிடம் திருப்பித் தரப்பட வேண்டும் அல்லது அதிகபட்சமாக ஏழு வேலை நாட்களுக்குள் திருப்பி தரப்பட வேண்டும். தாமதமாகும் ஒவ்வொரு நாளைக்கும் கடன் வழங்கும் நிறுவனங்கள் கடனாளிகளுக்கு ரூபாய் 5000 இழப்பீடாக வழங்க வேண்டும். மேலும் நகையை தாமதமாக திருப்பி கொடுத்தால், கடனாளி கடன் வழங்கும் நிறுவனத்திடம் வேறு இழப்பீடு கோரும் உரிமையும் உள்ளது.

    9. வங்கிகளால் விற்கப்படும் 22 கேரட் அல்லது அதற்கு மேல் தூய்மையான தங்க நாணயங்களுக்கு மட்டுமே கடன் வழங்கப்படும் என்ற நிபந்தனை கைவிடப்பட்டது.

    10. கடன் வாங்குபவர்களின் நலனை பாதிக்கும்- குறிப்பாக கடனுக்கான- நிபந்தனைகள் மற்றும் முக்கிய கடிதங்கள் அனைத்தும் அந்தந்த மாநில மொழிகளிலே அல்லது கடனாளிகள் விரும்பும் மொழியிலே இருக்கும்.

    gold loan limit gold loan policy 2025 gold loan rules gold mortgage rules Indian banking update RBI announcement RBI new update RBI rollback norms Reserve Bank of India gold loan Tamil Nadu finance news
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகோகுல்ராஜ் வழக்கில் வாதாடிய வழக்கறிஞருக்கு அரசு இன்னும் சம்பளம் தரலயாம்..
    Next Article நிர்வாகத் திறனற்ற ஆட்சிக்கு, கிளாம்பாக்கமே சாட்சி! தமிழக அரசு மீது பாயும் எடப்பாடி பழனிசாமி..
    Editor TN Talks

    Related Posts

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    October 14, 2025

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    October 14, 2025

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    October 14, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    Trending Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    October 15, 2025

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    October 14, 2025

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    October 14, 2025

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    October 14, 2025

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    October 13, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.