Close Menu
    What's Hot

    மீண்டும் திமுக ஆட்சிதான்!. பேரவையில் செல்வப்பெருந்தகை பேசியது என்ன?

    ஏஐ மாநாட்டில் ரோபோ நாய்; சீனா நம்மை கேலி செய்கிறது!. ராகுல் காந்தி கண்டனம்!

    வெல்லும் தமிழ்ப் பெண்கள்!. பிப்.23 முதல் வீடு வீடாக பிரசாரம்! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»சபரிமலையில் தங்கம் திருட்டு விவகாரம்: ஆய்வுக்காக தங்க மாதிரிகள் சேகரிப்பு
    இந்தியா

    சபரிமலையில் தங்கம் திருட்டு விவகாரம்: ஆய்வுக்காக தங்க மாதிரிகள் சேகரிப்பு

    Editor TN TalksBy Editor TN TalksNovember 18, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Sabarimalai gold
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் திருட்டு விவகாரம் தொடர்பாக கோயில் சந்நிதானத்தில் உள்ள கருவறைக் கதவுகள், துவார பாலகர்களின் சிலைகள் ஆகியவற்றில் இருந்து ஆய்வுக்காக மாதிரிகளை சிறப்பு புலனாய்வு குழுவினர் சேகரித்தனர்.

    கடந்த 2019ல் சபரிமலை ஐயப்பன் கோயிலின் கருவறைக்கு கதவுகள், துவாரபாலகர் சிலைகள் பராமரிப்பு பணிகளுக்காக அகற்றப்பட்டு, பின்னர் புதுப்பிக்கப்பட்டது. தங்க முலாம் பூசப்பட்டு மீண்டும் தங்கத் தகடுகள் அணிவிக்கப்பட்ட போது, சுமார் 4 கிலோ அளவுக்கு தங்கம் திருடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்த புகார் தொடர்பாக தேவசம் போர்டு அதிகாரிகள் இருவர், பெங்களூரு தொழிலதிபர் ஒருவர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  சபரிமலை கோயிலில் தங்கம் திருடப்பட்ட விவகாரத்தில் கேரள உயர் நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழு தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது.

    இதனிடையே மாயமான தங்கத்தின் அளவை கண்டுபிடிக்க தங்க கவசங்களில் அறிவியல் பூர்வமான ஆய்வு செய்ய சிறப்பு புலனாய்வு குழுவுக்கு கேரள உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியதையடுத்து, தடயவியல் ஆய்வுக்காக SIT அதிகாரிகள் சந்நிதானத்தில் இருந்து தங்க மாதிரிகளை சேகரித்துள்ளனர். இந்த நிகழ்வு முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. தடயவியல் மற்றும் அறிவியல்பூர்வ சோதனைக்குப் பிறகு கண்டறியப்படும் தகவல்களை கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநாளை கோவை வருகிறார் பிரதமர் மோடி! உச்சகட்ட பாதுகாப்பு!
    Next Article தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 குறைந்தது!
    Editor TN Talks

    Related Posts

    ஏஐ மாநாட்டில் ரோபோ நாய்; சீனா நம்மை கேலி செய்கிறது!. ராகுல் காந்தி கண்டனம்!

    February 18, 2026

    இந்தியாவுக்கு நான் எப்போது வருவேன் என தெரியாது!. விஜய் மல்லையா!

    February 18, 2026

    ஆன்லைனில் வாடகை வீடு தேடுகிறீர்களா? சைபர் குற்றவாளிகளின் வலையில் சிக்கி பணத்தை இழந்த மருத்துவர்!. 

    February 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மீண்டும் திமுக ஆட்சிதான்!. பேரவையில் செல்வப்பெருந்தகை பேசியது என்ன?

    ஏஐ மாநாட்டில் ரோபோ நாய்; சீனா நம்மை கேலி செய்கிறது!. ராகுல் காந்தி கண்டனம்!

    வெல்லும் தமிழ்ப் பெண்கள்!. பிப்.23 முதல் வீடு வீடாக பிரசாரம்! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!

    இந்தியாவுக்கு நான் எப்போது வருவேன் என தெரியாது!. விஜய் மல்லையா!

    தேர்தல் பரபரப்பு!. மார்ச்-ல் அடுத்தடுத்து 3 முறை தமிழகம் வரும் பிரதமர் மோடி!. திருச்சி, தஞ்சை டார்கெட்!

    Trending Posts

    தவெக-வுக்கு நோ!. திமுகவில் இணையும் அதிமுக முன்னாள் அமைச்சர்?. EPS, KAS-க்கு ஷாக்!. 

    February 18, 2026

    வெல்லும் தமிழ்ப் பெண்கள்!. பிப்.23 முதல் வீடு வீடாக பிரசாரம்! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!

    February 18, 2026

    ஆன்லைனில் வாடகை வீடு தேடுகிறீர்களா? சைபர் குற்றவாளிகளின் வலையில் சிக்கி பணத்தை இழந்த மருத்துவர்!. 

    February 18, 2026

    மாநிலங்களவை தேர்தல்!. காங்கிரஸுக்கு மேலும் ஒரு சீட்!. திமுகவின் வியூகம் என்ன?

    February 18, 2026

    விஸ்வரூபம் எடுத்த 7.5% இட ஒதுக்கீடு; ஆதாரத்தை திமுக காட்ட முடியுமா?. எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.