பாஜகவில் இருந்து புதுச்சேரி மாநில முன்னாள் தலைவர் சாமிநாதன் விலகுவதாக அறிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சியில் 3-முறை மாநிலத் தலைவராகவும், 1-முறை நியமன சட்டமன்ற உறுப்பினராகவும்,
கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக கட்சி பணி செய்து வந்தவர் சாமிநாதன். இந்த நிலையில் அவர் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
மேலும் ”புதுச்சேரி மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்றும், ஊழலற்ற நேர்மையான புதியவர்களை கொண்டு புதிய அரசு அமைய முழுவீச்சில் பாடுபடுவேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.