Close Menu
    What's Hot

    ஐசிசி டி20 தரவரிசை!. டாப் 10ல் நுழைந்த இஷான் கிஷன்!. அசைக்க முடியாத முதலிடம்!

    மாநிலங்களவை தேர்தல்!. காங்கிரஸுக்கு மேலும் ஒரு சீட்!. திமுகவின் வியூகம் என்ன?

    சென்னை மாநகராட்சி பட்ஜெட்!. முக்கிய அம்சங்கள் என்ன?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»நாடு தழுவிய வேலை நிறுத்தம்… தமிழ்நாட்டிலும் தொடர்கிறதா?
    இந்தியா

    நாடு தழுவிய வேலை நிறுத்தம்… தமிழ்நாட்டிலும் தொடர்கிறதா?

    Editor TN TalksBy Editor TN TalksJuly 9, 2025Updated:July 9, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    2 8
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    குறைந்தபட்ச ஊதிய உயர்வை அதிகரிக்க வேண்டும், பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும், படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும், மத்திய அரசின் தொழிலாள விரோத சட்டங்களை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நாடு தழுவிய அளவிலான வேலைநிறுத்தத்துக்கு மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

    தமிழ்நாட்டில் மட்டும் மொத்தம் 13 தொழிற்சங்கங்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. அதே நேரத்தில், அ.தி.மு.க.வின் அண்ணா தொழிற்சங்கம் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்கவில்லை என அறிவித்துள்ளது. எனவே அந்த தொழிற்சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள் வழக்கம் போல் பணிக்கு வருவார்கள். எனவே குறைந்த எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கப்படலாம் எனத் தெரிகிறது.

    வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு மாநில மையத்தின், ஒருங்கிணைப்பாளர் அருள்ராஜ் வெளியிட்ட அறிக்கையில், ‘நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்திற்கு எங்களது கூட்டமைப்பு ஆதரவு தெரிவிப்பதோடு, கலந்து கொள்ளவும் முடிவு செய்துள்ளது’ என்று கூறி உள்ளார். சி.ஐ.டி.யு.வில் ஆட்டோ தொழிலாளர்கள் அதிகளவில் அங்கம் வகிக்கின்றனர். எனவே பெரும்பாலான ஆட்டோக்கள் ஓடுவதற்கு வாய்ப்பு இல்லை. அரசு ஊழியர்மற்றும் வங்கி ஊழியர்கள்சங்கங்களும் இந்த நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் பங்கேற்க உள்ளனர். இதனால் வங்கிகள் இயங்காது.

    விவசாயிகள் மற்றும் கிராமப்புற தொழிலாளர்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக தலைமை செயலாளர் முருகானந்தம், அனைத்து துறை செயலாளர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், “தமிழகத்தில் சில அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்படாத சங்கங்கள் சில கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஒரு நாள் அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. அரசு ஊழியர்களால் வேலைநிறுத்தம் அல்லது ஆர்ப்பாட்டம் அல்லது வேறு எந்த வகையான போராட்டத்தில் பங்கேற்பது, அரசு அலுவலகங்களின் சாதாரண செயல்பாட்டை பாதிக்கும். இது தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடத்தை விதிகள், 1973-ஐ மீறுவதாகும். அதனை மீறுவர்களுக்கு எதிராக ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்கப்படும்.

    எனவே இன்று பணிக்கு வராத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் படிகள் வழங்கப்படாது. அதாவது ‘வேலை இல்லை சம்பளம் இல்லை’. மேலும் அலுவலகத்திற்கு வராத ஊழியர்களுக்கு எதிராக உடனடியாக ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதே நேரத்தில் வேலை நிறுத்ததில் ஈடுபடும் பகுதி நேர ஊழியர்கள், தினசரி ஊதியம் பெறுபவர்கள் மற்றும் ஒருங்கிணைந்த ஊதியம் பெறுபவர்கள் பணியில் இருந்து நீக்கப்படுவார்கள். எனவே அனைத்து துறை தலைவர்கள், கலெக்டர்கள் ஆகியோர் பணிக்கு வராத ஊழியர்கள் குறித்து காலை 10.15 மணிக்குள் அரசுக்கு அறிக்கை தரவேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅட்லீ படத்தில் ஹாலிவுட் வில்லன்…வில் ஸ்மித்தா? டுவைன் ஜான்சனா?
    Next Article தமிழ்நாட்டில் வழக்கம்போல் இயங்கிய அரசு அலுவலகங்கள்..
    Editor TN Talks

    Related Posts

    ஐசிசி டி20 தரவரிசை!. டாப் 10ல் நுழைந்த இஷான் கிஷன்!. அசைக்க முடியாத முதலிடம்!

    February 18, 2026

    மாநிலங்களவை தேர்தல்!. காங்கிரஸுக்கு மேலும் ஒரு சீட்!. திமுகவின் வியூகம் என்ன?

    February 18, 2026

    சென்னை மாநகராட்சி பட்ஜெட்!. முக்கிய அம்சங்கள் என்ன?

    February 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஐசிசி டி20 தரவரிசை!. டாப் 10ல் நுழைந்த இஷான் கிஷன்!. அசைக்க முடியாத முதலிடம்!

    மாநிலங்களவை தேர்தல்!. காங்கிரஸுக்கு மேலும் ஒரு சீட்!. திமுகவின் வியூகம் என்ன?

    சென்னை மாநகராட்சி பட்ஜெட்!. முக்கிய அம்சங்கள் என்ன?

    மாநில சுயாட்சிக்காக அரசியலமைப்பு சட்டத்தில் மாற்றம் வரவேண்டும்!. முதல்வர் மு.க.ஸ்டாலின்!

    அதிமுகவில் அந்த 2 எம்பி சீட் யாருக்கு?. முட்டி மோதும் முக்கிய தலைகள்!.

    Trending Posts

    தவெக-வுக்கு நோ!. திமுகவில் இணையும் அதிமுக முன்னாள் அமைச்சர்?. EPS, KAS-க்கு ஷாக்!. 

    February 18, 2026

    மாநிலங்களவை தேர்தல்!. காங்கிரஸுக்கு மேலும் ஒரு சீட்!. திமுகவின் வியூகம் என்ன?

    February 18, 2026

    விஸ்வரூபம் எடுத்த 7.5% இட ஒதுக்கீடு; ஆதாரத்தை திமுக காட்ட முடியுமா?. எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

    February 18, 2026

    ஐசிசி டி20 தரவரிசை!. டாப் 10ல் நுழைந்த இஷான் கிஷன்!. அசைக்க முடியாத முதலிடம்!

    February 18, 2026

    சென்னை மாநகராட்சி பட்ஜெட்!. முக்கிய அம்சங்கள் என்ன?

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.