Close Menu
    What's Hot

    ராணுவத்தையே வழிநடத்தும் பெண் தளபதி!. உலக நாடுகளுக்கு முன்னுதாரணமான ஆஸ்திரேலியா!

    அனல் காற்று வீசும்; 105 டிகிரியைத் தாண்டிய வெயில்!. ஏப்.17 வரை வீட்டுக்குள்ளேயே இருங்க!

    74 ஆண்டுகால காத்திருப்பு!. பீகாரின் முதல் பாஜக முதலமைச்சராகிறார் சாம்ராட் சௌத்ரி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»தொழில்நுட்பக் கோளாறு: நாடு முழுவதும் விமான சேவை பாதிப்பு!
    இந்தியா

    தொழில்நுட்பக் கோளாறு: நாடு முழுவதும் விமான சேவை பாதிப்பு!

    Editor TN TalksBy Editor TN TalksDecember 3, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    flights
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நாடு முழுவதும் இன்று (டிச.3) டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு விமான நிலையங்களிலும் ஏற்பட்ட கணினி தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, செக்-இன் அமைப்புகள் பாதிக்கப்பட்டு பல்வேறு விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

    இதுபற்றி வாரணாசி விமான நிலைய பயணிகளுக்கு வெளியிடப்பட்ட ஓர் அறிவிப்பில், ‘மைக்ரோசாப்ட் விண்டோஸில் உலகளவில் பெரிய அளவிலான சேவை செயலிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனால் விமான நிலையங்களில் தொழில்நுட்ப சேவைகள்/செக்-இன் அமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டது.

    தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட், ஆகாசா ஏர் மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய நான்கு விமான நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து மைக்ரோசாப்ட் மற்றும் விமான நிறுவனங்களிடமிருந்து உடனடியாக பதில் எதுவும் கிடைக்கவில்லை.

    ஹைதராபாத்தின் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை ஏராளமான பயணிகள், தாமதங்கள் குறித்து விமான நிறுவன உதவி மையத்தை நாடி தங்கள் விமானங்கள் பற்றிய தகவல்களைத் தேடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    அதேபோல, பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திலும் சில விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. இதனால் நான்கு விமானங்கள் தாமதமாக வந்தன. மேலும், பல இண்டிகோ விமான சேவைகள் செயல்பாட்டு காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டன. 22 வருகைகள் மற்றும் 20 புறப்பாடுகள் உட்பட மொத்தம் 42 ரத்துகளை இண்டிகோ விமான நிறுவனம் பதிவு செய்தது.

    இன்று காலை டெல்லி சர்வதேச விமான நிலைய லிமிடெட் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘தொழில்நுட்ப கோளாறு காரணமாக சில உள்நாட்டு விமான நிறுவனங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் தாமதங்கள், நேர மாற்றம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து ஏர் இந்தியா எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ கணிணி சேவை பாதிப்பு முழுமையாக மீட்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து விமான நிலையங்களிலும் செக்-இன் வழக்கம் போல் செயல்படுகிறது. எங்கள் அனைத்து விமானங்களும் அட்டவணைப்படி இயங்குகின்றன. எங்கள் பயணிகளின் புரிதலுக்கு நன்றி’ என்று தெரிவித்துள்ளது.

    இண்டிகோ வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘தொழில்நுட்ப சிக்கல்கள் மற்றும் செயல்பாட்டுத் தேவைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த சில நாட்களில் பல தவிர்க்க முடியாத விமான தாமதங்கள் மற்றும் சில ரத்துகள் ஏற்பட்டன. செயல்பாடுகள் விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்புவதை உறுதிசெய்ய எங்கள் குழுக்கள் விடாமுயற்சியுடன் செயல்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு மாற்று விமான விருப்பங்கள் அல்லது பணத்தைத் திரும்பச் செலுத்துகிறோம்’ என்று தெரிவித்துள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமீண்டும் சுதா கொங்கரா இயக்கத்தில் SK?
    Next Article மூன்றாக மடித்துக் கொள்ளக்கூடிய தொலைபேசியை வெளியிட்டது சாம்சங் நிறுவனம் !!!
    Editor TN Talks

    Related Posts

    74 ஆண்டுகால காத்திருப்பு!. பீகாரின் முதல் பாஜக முதலமைச்சராகிறார் சாம்ராட் சௌத்ரி!

    April 14, 2026

    அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள்!. இன்று நாடு முழுவதும் பொது விடுமுறை!.

    April 14, 2026

    மகிழ்ச்சியும், வெற்றியும் நிறையட்டும்!. பிரதமர் மோடி தமிழில் புத்தாண்டு வாழ்த்து!

    April 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ராணுவத்தையே வழிநடத்தும் பெண் தளபதி!. உலக நாடுகளுக்கு முன்னுதாரணமான ஆஸ்திரேலியா!

    அனல் காற்று வீசும்; 105 டிகிரியைத் தாண்டிய வெயில்!. ஏப்.17 வரை வீட்டுக்குள்ளேயே இருங்க!

    74 ஆண்டுகால காத்திருப்பு!. பீகாரின் முதல் பாஜக முதலமைச்சராகிறார் சாம்ராட் சௌத்ரி!

    திருப்பூரில் தவெக பரப்புரையில் பரபரப்பு!. வேட்பாளர் உட்பட 15 பேர் மயக்கம்!. வார்னிங் கொடுத்த டிஎஸ்பி!.

    “பழைய திமுகவை பார்க்க வேண்டியிருக்கும்”!. பிரதமர் மோடிக்கு கடைசி வார்னிங்!. முதல்வர் ஸ்டாலின்!

    Trending Posts

    ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000, ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்!. பாஜக தேர்தல் அறிக்கை

    April 14, 2026

    ராணுவத்தையே வழிநடத்தும் பெண் தளபதி!. உலக நாடுகளுக்கு முன்னுதாரணமான ஆஸ்திரேலியா!

    April 14, 2026

    74 ஆண்டுகால காத்திருப்பு!. பீகாரின் முதல் பாஜக முதலமைச்சராகிறார் சாம்ராட் சௌத்ரி!

    April 14, 2026

    திருப்பூரில் தவெக பரப்புரையில் பரபரப்பு!. வேட்பாளர் உட்பட 15 பேர் மயக்கம்!. வார்னிங் கொடுத்த டிஎஸ்பி!.

    April 14, 2026

    “பழைய திமுகவை பார்க்க வேண்டியிருக்கும்”!. பிரதமர் மோடிக்கு கடைசி வார்னிங்!. முதல்வர் ஸ்டாலின்!

    April 14, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.