இந்தியாவில் வலி, காய்ச்சல் மற்றும் வீக்கத்திற்காக பரவலாக பயன்படுத்தப்படும் Nimesulide மருந்தின்100 mg க்கும் அதிக வீரியம் கொண்ட மாத்திரைகளுக்கும் மத்திய அரசு உடனடி தடைவித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 100 மி.கி.க்கு மேற்பட்ட அளவில் உடனடி விளைவளிக்கும் (immediate release) வகையிலான நைமிசுலைடு (nimesulide) வாய்வழி மருந்துகளை தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. “100 மி.கி.க்கு மேல் நிம்சுலைடு கொண்ட அனைத்து வாய்வழி மருந்துகளும் மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும், அந்த மருந்துக்கு பாதுகாப்பான மாற்றுகள் கிடைக்கின்றன என்றும் மத்திய அரசு அறிந்துள்ளது.

மனித பயன்பாட்டுக்காக நாட்டில் இந்த மருந்தை உற்பத்தி செய்தல், விற்பனை செய்தல் மற்றும் வினியோகிப்பதை தடை செய்வது பொது நலனுக்காக அவசியம் மற்றும் பொருத்தமானது என்று மத்திய அரசு கருதுகிறது. எனவே, மருந்து பொருட்கள் சட்டப்பிரிவுகளின்படி 100 மி.கி.க்கு மேல் நிம்சுலைடு கொண்ட அனைத்து வாய்வழி மருந்துகளும் தடை செய்யப்படுகின்றன” என கூறப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version