Close Menu
    What's Hot

    திருப்பதி லட்டு கலப்படத்திற்கு செக்!. ரூ.25 கோடியில் லேப்!. பிரான்ஸில் இருந்து வரும் உயர்தர கருவிகள்!.

    ஆப்கான் மீது பாக்., வான்வழித் தாக்குதல்!. 80 தீவிரவாதிகள் பலி!.

    டி20 உலகக்கோப்பை!. சென்னை வந்தடைந்தது இந்திய அணி!. காதலியுடன் ஜாலி செய்யும் ஹர்திக் பாண்டியா!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»திருப்பதி லட்டு கலப்படத்திற்கு செக்!. ரூ.25 கோடியில் லேப்!. பிரான்ஸில் இருந்து வரும் உயர்தர கருவிகள்!.
    இந்தியா

    திருப்பதி லட்டு கலப்படத்திற்கு செக்!. ரூ.25 கோடியில் லேப்!. பிரான்ஸில் இருந்து வரும் உயர்தர கருவிகள்!.

    Editor web3By Editor web3February 23, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Tirupati Laddu lab
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரசாதமான லட்டின் தரம் மற்றும் புனிதத்தைப் பாதுகாக்கும் வகையில், திருமலையில் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உலகத்தரம் வாய்ந்த நவீன பரிசோதனை கூடம் அமைக்கப்பட உள்ளது. சமீபத்தில் லட்டு தயாரிப்பில் பயன்படுத்தப்படும் நெய்யில் கலப்படம் இருந்ததாக எழுந்த சர்ச்சைகளைத் தொடர்ந்து, இனிவரும் காலங்களில் அத்தகைய தவறுகள் நடக்காமல் இருக்க இந்த அதிரடி முடிவை திருப்பதி தேவஸ்தானம்  எடுத்துள்ளது.

    இந்த ஆய்வகத்தின் 90 சதவீதப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்த மாதம் முதல் இது செயல்பாட்டுக்கு வரும் என்று மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சத்ய குமார் யாதவ் தெரிவித்துள்ளார். திருமலையில் உள்ள மாவு மில் வளாகத்தில் 12,000 சதுர அடி பரப்பளவில் இந்த இருதள ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆய்வகத்தின் சிறப்பம்சமாக, நெய்யின் தரம் மற்றும் வாசனையைத் துல்லியமாகப் பரிசோதிக்கப் பிரான்ஸ் நாட்டிலிருந்து ‘E-Tongue’ (மின்னணு நாக்கு) மற்றும் ‘E-Nose’ (மின்னணு மூக்கு) ஆகிய கருவிகள் 3.5 கோடி ரூபாய் செலவில் இறக்குமதி செய்யப்பட உள்ளன. மனிதர்கள் சுவை மற்றும் வாசனையை உணர்வதைப் போன்றே, ஆனால் மிகத் துல்லியமாகச் செயல்படும் இந்தக் கருவிகள், நெய்யில் சிறிதளவு கலப்படம் இருந்தாலும் அதை உடனடியாகக் கண்டுபிடித்துவிடும். மே மாதத்திற்குள் இந்தக் கருவிகள் நிறுவப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த ஆய்வகத்தில் சுமார் 50 நவீனக் கருவிகள் கொண்டு 60 வகையான மூலப்பொருட்கள் (நெய், முந்திரி, ஏலக்காய், மிளகாய் தூள் போன்றவை) பரிசோதிக்கப்படும். பூச்சிக்கொல்லி மருந்துகள், கன உலோகங்கள் மற்றும் நுண்ணுயிர் பாதிப்புகள் என 200-க்கும் மேற்பட்ட சோதனைகள் இங்கு மேற்கொள்ளப்படும். மத்திய அரசின் FSSAI அமைப்பு இதற்காக 23 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. ஆந்திரப் பிரதேசத்திலேயே ஒரு புனிதத் தலத்தில் இவ்வளவு வசதிகளுடன் கூடிய உணவு ஆய்வகம் அமைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஆப்கான் மீது பாக்., வான்வழித் தாக்குதல்!. 80 தீவிரவாதிகள் பலி!.
    Editor web3
    • Website

    Related Posts

    உச்சகட்ட போர் பதற்றம்!. இந்தியர்கள் உடனடியாக வெளியேற இந்தியத் தூதரகம் அறிவுறுத்தல்!

    February 23, 2026

    என் சகோதரிகளின் நலனே முக்கியம்!. ரூ.5000 வழங்கியதன் பின்னணியை விளக்கிய முதல்வர் ஸ்டாலின்!

    February 23, 2026

    SIR பணிகளுக்குப் பின் புதிய பட்டியல்!. தமிழ்நாட்டில் வாக்காளர்களின் எண்ணிக்கை 5.67 கோடியாக உயர்வு!.

    February 23, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திருப்பதி லட்டு கலப்படத்திற்கு செக்!. ரூ.25 கோடியில் லேப்!. பிரான்ஸில் இருந்து வரும் உயர்தர கருவிகள்!.

    ஆப்கான் மீது பாக்., வான்வழித் தாக்குதல்!. 80 தீவிரவாதிகள் பலி!.

    டி20 உலகக்கோப்பை!. சென்னை வந்தடைந்தது இந்திய அணி!. காதலியுடன் ஜாலி செய்யும் ஹர்திக் பாண்டியா!

    உச்சகட்ட போர் பதற்றம்!. இந்தியர்கள் உடனடியாக வெளியேற இந்தியத் தூதரகம் அறிவுறுத்தல்!

    என் சகோதரிகளின் நலனே முக்கியம்!. ரூ.5000 வழங்கியதன் பின்னணியை விளக்கிய முதல்வர் ஸ்டாலின்!

    Trending Posts

    தமிழகம் முழுவதும் வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல்!. சென்னையில் சுமார் 28.30 லட்சம் வாக்காளர்கள்!

    February 23, 2026

    என் சகோதரிகளின் நலனே முக்கியம்!. ரூ.5000 வழங்கியதன் பின்னணியை விளக்கிய முதல்வர் ஸ்டாலின்!

    February 23, 2026

    அரசியல்வாதிகள் சொத்தை டிக்ளேர் பண்ண ரெடியா?. விஜய் அட்டாக்!.

    February 23, 2026

    8 தொகுதிகள்!. தனிச் சின்னம்!. ராஜ்யசபா சீட்!. திமுகவிடம் மதிமுக வைத்த அதிரடி டிமாண்ட்!.

    February 23, 2026

    5 சீட் கேட்கும் மனிதநேய மக்கள் கட்சி!. திமுக தலைமை எடுக்கப்போகும் முடிவு என்ன?.

    February 23, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.