Close Menu
    What's Hot

    மீண்டும் திமுக ஆட்சிதான்!. பேரவையில் செல்வப்பெருந்தகை பேசியது என்ன?

    ஏஐ மாநாட்டில் ரோபோ நாய்; சீனா நம்மை கேலி செய்கிறது!. ராகுல் காந்தி கண்டனம்!

    வெல்லும் தமிழ்ப் பெண்கள்!. பிப்.23 முதல் வீடு வீடாக பிரசாரம்! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»ராகிங் தடுப்பு விதிகளை பின்பற்றாத பல்கலை.கள் விளக்கம் கேட்டு யுஜிசி நோட்டீஸ்
    இந்தியா

    ராகிங் தடுப்பு விதிகளை பின்பற்றாத பல்கலை.கள் விளக்கம் கேட்டு யுஜிசி நோட்டீஸ்

    Editor TN TalksBy Editor TN TalksJune 11, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    say no to ragging
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நாடு முழுவதும் ராகிங் தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றாத 89 உயர்கல்வி நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு யுஜிசி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    நம்நாட்டில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் ராகிங்கை தடுப்பதற்கான வழிகாட்டுதல்கள் பல்கலைக்கழக மானியக்குழுவால்(யுஜிசி) வகுக்கப்பட்டு 2009-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதில் கல்வி நிறுவனங்களின் பொறுப்புணர்வு, முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துதல், திடீர் ஆய்வுகள் குறித்த பல்வேறு வழிமுறைகள் இடம்பெற்றுள்ளன. அவற்றை பின்பற்றி கல்லூரிகள் தங்கள் வளாகங்களில் ராகிங் இல்லாத சூழலை உருவாக்க வேண்டும் என்பது கட்டாயமாகும். மேலும், காலத்துக்கேற்ப திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களையும் ஆண்டுதோறும் யுஜிசி வழங்கி வருகிறது.

    இந்நிலையில் நாடு முழுவதும் ராகிங் தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றாத 89
    கல்வி நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு தற்போது யுஜிசி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த அண்ணாமலை பல்கலைக்கழகம், தமிழ்நாடு உடற்கல்வியியல் பல்கலைக்கழகம், சாஸ்திரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம், திருச்சி ஐஐஎம், ஜேப்பியார் பல்கலைக்கழகம் ஆகிய 5 கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.

    இதுகுறித்து யுஜிசி செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி, சம்மந்தப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: யுஜிசி பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கியும் ராகிங் தடுப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்படாதது கவனத்துக்கு வந்துள்ளன. யுஜிசியின் ராகிங் தடுப்பு விதிமுறைகளை கடைபிடிப்பது கட்டாயமாகும். இதை செய்ய தவறுவது
    விதிமீறல் என்பதையும் தாண்டி மாணவர் பாதுகாப்பை சமரசம் செய்வதாக அமைந்துவிடும்.

    இதையடுத்து இந்த கடிதம் கிடைத்த 30 நாட்களுக்குள் கல்லூரிகள் தங்கள் வளாகத்துக்குள் ராகிங் செய்வதை தடுக்க மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையை வழங்க வேண்டும். இதை மீறினால் யுஜிசி நிதியுதவியை திரும்பப் பெறுதல், அங்கீகாரத்தை ரத்து செய்தல் போன்ற ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும். பாதுகாப்பான கல்விச் சூழலை உறுதி செய்வதில் யுஜிசி உறுதியாக உள்ளது. இந்த விவகாரத்தில் கல்வி நிறுவனங்கள் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது அவசியமாகும்.
    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநித்தி ஆசிரமத்தில் வசிக்கும் பெண் பக்தைகள்… வெளியேற விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு..
    Next Article ஸ்டெர்லைட் சுற்றுப்புற மாசுவை அகற்றி சீரமைப்பது… 2 வாரங்களில் குழு அமைக்க அரசுக்கு உத்தரவு..
    Editor TN Talks

    Related Posts

    ஏஐ மாநாட்டில் ரோபோ நாய்; சீனா நம்மை கேலி செய்கிறது!. ராகுல் காந்தி கண்டனம்!

    February 18, 2026

    இந்தியாவுக்கு நான் எப்போது வருவேன் என தெரியாது!. விஜய் மல்லையா!

    February 18, 2026

    ஆன்லைனில் வாடகை வீடு தேடுகிறீர்களா? சைபர் குற்றவாளிகளின் வலையில் சிக்கி பணத்தை இழந்த மருத்துவர்!. 

    February 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மீண்டும் திமுக ஆட்சிதான்!. பேரவையில் செல்வப்பெருந்தகை பேசியது என்ன?

    ஏஐ மாநாட்டில் ரோபோ நாய்; சீனா நம்மை கேலி செய்கிறது!. ராகுல் காந்தி கண்டனம்!

    வெல்லும் தமிழ்ப் பெண்கள்!. பிப்.23 முதல் வீடு வீடாக பிரசாரம்! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!

    இந்தியாவுக்கு நான் எப்போது வருவேன் என தெரியாது!. விஜய் மல்லையா!

    தேர்தல் பரபரப்பு!. மார்ச்-ல் அடுத்தடுத்து 3 முறை தமிழகம் வரும் பிரதமர் மோடி!. திருச்சி, தஞ்சை டார்கெட்!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.