ராணி வீரமங்கை வேலு நாச்சியார் ஜனவரி 3, 1730 அன்று பிறந்தார். அவர் இராமநாதபுரம் மன்னர் செல்ல முத்து விஜயரகுநாத சேதுபதி மற்றும் சக்கந்தி முத்தாளின் ஒரே மகளாக இருந்தார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் முன்னணி பெண் வீராங்கனைகளில் ஒருவராக இவர் புகழ்பெற்றார். அரச குடும்பத்தில் பிறந்ததால் கல்வி, சமூக பணிகள் மற்றும் அரசியல் அறிவில் சிறந்த பயிற்சி பெற்றவர்.
அதன்படி, வீரமங்கை வேலுநாச்சியாரின் 296வது பிறந்தநாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்தநிலையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, துணிச்சலையும், வியூகத் திறமையையும் கொண்டிருந்த வேலுநாச்சியாரின் தியாகமும் தொலைநோக்கு தலைமையும் பல தலைமுறைகளை ஊக்கப்படுத்தும் என்று கூறியுள்ளார்.
https://x.com/narendramodi/status/2007279340686565551?
மேலும், காலனித்துவ ஒடுக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த அவர், இந்தியாவை ஆள இந்தியர்களுக்கே உரிமை உண்டு என்பதை வலியுறுத்தினார். நல்லாட்சி மற்றும் கலாச்சார பெருமைக்கான அவரது உறுதிப்பாடும் போற்றத்தக்கது. அவரது தியாகமும் தொலைநோக்குத் தலைமையும் பல தலைமுறைகளை ஊக்கப்படுத்தும் என்று தெரிவித்து உள்ளார்.
இதே பதிவை மோடி தன் எக்ஸ் பக்கத்தில் ஆங்கிலத்திலும் வெளியிட்டுள்ளார். அவரின் இந்த பதிவுக்கு பாஜகவினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும் பல்வேறு கட்சி தலைவர்களும் வேலு நாச்சியாரின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்தி வருகிறார்கள்.
