Close Menu
    What's Hot

    ஒரே நாளில் ஆசியாவை உலுக்கிய நிலநடுக்கங்கள்!. மியான்மர் முதல் ஆப்கான் வரை குலுங்கிய பூமி!.

    மகளிர் இடஒதுக்கீடு மசோதா அரசியல் ஆதாயமே!. கார்கே விமர்சனம்!

    பழம்பெரும் பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!. திரையுலகினர் இரங்கல்!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»மனைவி பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்க கணவரின் அனுமதி பெற தேவையில்லை..
    இந்தியா

    மனைவி பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்க கணவரின் அனுமதி பெற தேவையில்லை..

    Editor TN TalksBy Editor TN TalksJune 20, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    indian passport 1200x675xt
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னையை சேர்ந்த ரேவதி என்பவர், பாஸ்போர்ட் கோரி மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் விண்ணப்பித்திருந்தார். விண்ணப்பித்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது குறித்து விசாரித்த போது, கணவரின் கையெழுத்து பெற்றிருந்தால் மட்டுமே விண்ணப்பித்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாஸ்போர்ட் அதிகாரி தெரிவித்திருந்தார்.

    கணவருக்கும் தனக்கும் இடையில் பிரச்சனை ஏற்பட்டு தனது கணவர் தாக்கல் செய்த விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளதால், கணவரின் கையெழுத்தை வற்புறுத்தாமல் பாஸ்போர்ட் வழங்க உத்தரவிடக் கோரி, ரேவதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்க கணவரின் அனுமதியோ, அவரது கையெழுத்தோ மனைவி பெற வேண்டிய அவசியம் இல்லை.

    கணவரின் கையெழுத்து பெற வேண்டும் என்று வற்புறுத்துவதன் மூலம், ஒரு பெண்ணை கணவனின் உடமையாக கருதும் இந்த சமூகத்தின் மனப்பான்மையே
    மண்டல பாஸ்போர்ட் அதிகாரியின் செயல் காட்டுகிறது.

    ஏற்கனவே கணவன் மனைவி உடனான உறவில் பிரச்சனை உள்ள நிலையில், கணவரிடம் இருந்து கையெழுத்து பெற்று வருவது என்பது இயலாது. திருமணம் ஆகிவிட்டால் பெண் தனது அடையாளத்தை இழந்து விடுவதில்லை.

    கணவனின், அனுமதி, கையெழுத்து இல்லாமல் மனைவி பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்க முடியும். கணவனின் கையெழுத்து பெற வேண்டும் என்ற நடைமுறை ஆணாதிக்கத்தை காட்டுகிறது என கூறிய நீதிபதி, மனுதாரரின் விண்ணப்பத்தை பரிசீலித்து நான்கு வாரங்களில் பாஸ்போர்ட் வழங்க பாஸ்போர்ட் மண்டல அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅடுத்தடுத்து விபத்தில் சிக்கும் ஏர் இந்தியா விமானம்… பறவை மோதியதால் அவசரமாக தரையிறக்கம்…
    Next Article காழ்ப்புணர்ச்சி காரணமாக என் மீது வழக்கு – ஜெகன்மூர்த்தி ஆவேசம்..
    Editor TN Talks

    Related Posts

    மகளிர் இடஒதுக்கீடு மசோதா அரசியல் ஆதாயமே!. கார்கே விமர்சனம்!

    April 12, 2026

    பழம்பெரும் பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!. திரையுலகினர் இரங்கல்!.

    April 12, 2026

    திமுகவின் மோசமான நிர்வாகம் அம்பலமாகி வருகிறது!. பிரதமர் மோடி அட்டாக்!

    April 12, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஒரே நாளில் ஆசியாவை உலுக்கிய நிலநடுக்கங்கள்!. மியான்மர் முதல் ஆப்கான் வரை குலுங்கிய பூமி!.

    மகளிர் இடஒதுக்கீடு மசோதா அரசியல் ஆதாயமே!. கார்கே விமர்சனம்!

    பழம்பெரும் பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!. திரையுலகினர் இரங்கல்!.

    “இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்”!. செங்கோட்டையன் பேச்சால் தவெக தொண்டர்கள் அதிர்ச்சி!

    ஸ்டாலின் டெல்டாகாரர் அல்ல.. உல்டாகாரர்!. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!.

    Trending Posts

    வேட்பாளர்கள் மீது அதிருப்தி?. வரும் 16-ல் விஜய் தலைமையில் ஆலோசனை கூட்டம்!. 

    April 12, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.