இந்தோனேஷியாவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர்.
இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் 7 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த கட்டிடத்தில் குடியிருப்புகளுடன் விவசாயத் துறைக்கு தேவையான பொருட்களை தயாரித்து கொடுக்கும் அலுவலகம் ஒன்றும் செயல்பட்டு வந்தது. இந்தநிலையில், இன்று (டிச. 9) பிற்பகல் அடுக்குமாடிக் கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
கட்டிடத்தின் முதல் மாடியில் ஏற்பட்ட தீ, சிறிது நேரத்தில் மளமளவென அடுத்தடுத்த தளங்களுக்கும் பரவத் தொடங்கியது. உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் போராடி தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது.
தீ விபத்தில் சிக்கியும், மூச்சுத் திணறியும் 20 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இந்த பயங்கர தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
