Close Menu
    What's Hot

    மீண்டும் படம் நடிக்கும் விஜய்? ‘ஜனநாயகன்’ நஷ்டத்தை ஈடு செய்ய அதிரடி முடிவு?

    அட்சய திருதியை 2026!. தங்கம் வாங்க உகந்த நேரமும், செல்வம் பெருக எளிய வழிபாடுகளும்!

    விக்கெட் எடுக்க முடியாமல் திணறும் பும்ரா!. 4 போட்டிகளில் ஒரு விக்கெட் கூட இல்லை!. ரசிகர்கள் அதிர்ச்சி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»உலகம்»‘காமெனி தாக்கப்பட்டால் போர் ஏற்படும்’!. ஈரான் ஜனாதிபதி எச்சரிக்கை!
    உலகம்

    ‘காமெனி தாக்கப்பட்டால் போர் ஏற்படும்’!. ஈரான் ஜனாதிபதி எச்சரிக்கை!

    Editor web3By Editor web3January 19, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Ayatollah Khamenei trump
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி மீதான எந்தவொரு தாக்குதலும் முழு ஈரானுக்கும் எதிரான ஒரு வெளிப்படையான போராகக் கருதப்படும் என்று ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் ஏற்பட்ட ஒரு காரசாரமான வாக்குவாதத்தைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக எக்ஸ் சமூக ஊடகத் தளத்தில் பெசெஷ்கியான் கூறியதாவது, “எங்கள் மாபெரும் தலைவர் மீதான தாக்குதல், ஈரானுக்கு எதிரான ஒரு முழு அளவிலான போரைப் போன்றது” என்று எழுதியுள்ளார். ஈரானுக்கு ஒரு புதிய தலைமை தேவை என்று டிரம்ப் ஒரு நேர்காணலில் கூறியதிலிருந்து பதட்டங்கள் அதிகரித்துள்ள நிலையில், அவரது இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

    நாட்டின் பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு  அமெரிக்காவைக் குற்றம் சாட்டிய அவர், அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் விதித்துவரும் நீண்டகால பகைமை மற்றும் மனிதாபிமானமற்ற தடைகளால் ஈரானிய மக்கள் கடுமையான துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள் என்றும் தெரிவித்தார்.

    இதற்கு முன், ஈரானின் உச்ச தலைவர் கமேனி, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, ஈரானில் சமீப காலத்தில் ஏற்பட்ட கலவரங்களின்போது ஏற்பட்ட மரணங்களுக்கும் சேதங்களுக்கும் ட்ரம்ப் பொறுப்பேற்கவேண்டும் எனக் கூறி, அவரை “குற்றவாளி” என்று அழைத்திருந்தார்.

    அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரானின் தலைமையை கடுமையாக விமர்சித்தார். அதில், பல தசாப்தங்களாக தொடரும் ஈரான் ஆட்சி முடிவுக்கு வர வேண்டும், நாட்டிற்கு புதிய தலைமையகம் தேவை என அவர் கூறினார். சமீப வாரங்களில் ஈரானில் நடந்துவரும் போராட்டங்கள், அரசியல் அழுத்தம், பொருளாதார நெருக்கடி, மற்றும் மனித உரிமை மீறல்கள் காரணமாக மக்களிடையே உருவான கோபத்தின் வெளிப்பாடே என ட்ரம்ப் தெரிவித்தார்.

    ஈரானியத் தலைவர்கள் பயம் மற்றும் வன்முறை மூலம் ஆட்சி செய்வதாக டிரம்ப் குற்றம் சாட்டினார். தற்போதைய தலைமை ஆட்சியில் நீடிப்பதற்காக அடக்குமுறையைக் கையாள்வதாகவும், அது நாட்டை அழிவுப் பாதைக்கு இட்டுச் சென்றுள்ளதாகவும் அவர் கூறினார். டிரம்பின் இரண்டாவது பதவிக்காலம் முதல் தெஹ்ரானுக்கும் வாஷிங்டனுக்கும் இடையிலான உறவுகள் மேலும் பதட்டமாகவே இருந்து வருகின்றன. இந்தக் காலகட்டத்தில், அமெரிக்கா தனது கடுமையான அழுத்தக் கொள்கையைத் தொடர்ந்தது, மேலும் இரு நாடுகளின் தலைவர்களும் அடிக்கடி வார்த்தைப் போரில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநாளை பாஜக தலைவர் தேர்தல்!. எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி பெயர்கள் நீக்கம்!.
    Next Article பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லாத தமிழகம்!. மற்ற பெண்கள் எப்படி வாழ முடியும் ?. டிடிவி தினகரன்!.
    Editor web3
    • Website

    Related Posts

    இலக்கு மாறிய ஏவுகணை; சிதறிய உயிர்கள்!. நைஜீரிய அரசின் தவறால் நிகழ்ந்த 100 பேர் மரணம்!

    April 13, 2026

    ஹைதி கோட்டை கூட்ட நெரிசலில் 30 பேர் பரிதாப பலி! திடீர் மழையால் நேர்ந்த சோகம்!

    April 13, 2026

    ஒரே நாளில் ஆசியாவை உலுக்கிய நிலநடுக்கங்கள்!. மியான்மர் முதல் ஆப்கான் வரை குலுங்கிய பூமி!.

    April 12, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மீண்டும் படம் நடிக்கும் விஜய்? ‘ஜனநாயகன்’ நஷ்டத்தை ஈடு செய்ய அதிரடி முடிவு?

    அட்சய திருதியை 2026!. தங்கம் வாங்க உகந்த நேரமும், செல்வம் பெருக எளிய வழிபாடுகளும்!

    விக்கெட் எடுக்க முடியாமல் திணறும் பும்ரா!. 4 போட்டிகளில் ஒரு விக்கெட் கூட இல்லை!. ரசிகர்கள் அதிர்ச்சி!

    வீட்டில் ஐஸ்வர்யம் பெருக… தமிழ் புத்தாண்டு வெற்றிகரமாக அமைய கடைபிடிக்க வேண்டிய வழிபாட்டு முறைகள்!

    இலக்கு மாறிய ஏவுகணை; சிதறிய உயிர்கள்!. நைஜீரிய அரசின் தவறால் நிகழ்ந்த 100 பேர் மரணம்!

    Trending Posts

    மீண்டும் படம் நடிக்கும் விஜய்? ‘ஜனநாயகன்’ நஷ்டத்தை ஈடு செய்ய அதிரடி முடிவு?

    April 13, 2026

    இலக்கு மாறிய ஏவுகணை; சிதறிய உயிர்கள்!. நைஜீரிய அரசின் தவறால் நிகழ்ந்த 100 பேர் மரணம்!

    April 13, 2026

    நெல் சாகுபடி ஊக்கத்தொகை!. கடிதத்தை வெளியிட தயாரா?. நிர்மலாவுக்கு ஸ்டாலின் சவால்!.

    April 13, 2026

    விக்கெட் எடுக்க முடியாமல் திணறும் பும்ரா!. 4 போட்டிகளில் ஒரு விக்கெட் கூட இல்லை!. ரசிகர்கள் அதிர்ச்சி!

    April 13, 2026

    வீட்டில் ஐஸ்வர்யம் பெருக… தமிழ் புத்தாண்டு வெற்றிகரமாக அமைய கடைபிடிக்க வேண்டிய வழிபாட்டு முறைகள்!

    April 13, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.