தோஷாகானா ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அரசு நிதியை தவறாக பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, மற்றொரு வழக்கில் 2023-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி இருவரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்
முன்னதாக, சிறையில் அவர் துன்புறுத்தப்படுவதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டிய நிலையில், அவருக்கு உயர்தர வசதிகள் வழங்கப்படுவதாக பாகிஸ்தான் அரசு விளக்கம் அளித்துள்ளது.
இவரை தனிமை சிறையில் இருந்து விடுவிக்க ஐநா சபை ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நீண்டகால சிறை தண்டனை இம்ரான் கானின் அரசியல் வாழ்க்கையில் பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இத்தீர்ப்பைத் தொடர்ந்து பாகிஸ்தானில் அரசியல் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
