பாகிஸ்தான் ராணுவ அதிகாரியான அகமது ஷரிஃப், செய்தியாளர் சந்திப்பின்போது பெண் நிரூபரை பார்த்து செய்த செயல் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பாகிஸ்தானின் இன்டர்-சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் டைரக்டர் ஜெனரல் லெப்டினன்ட் ஜெனரலராக அகமது ஷெரிப் சவுத்ரி பதவி வகித்து வருகிறார். இந்தநிலையில், செய்தியாளர் சந்திப்பின்போது அவரது செயல் தற்போது வைரலாகி சர்ச்சையை தூண்டியுள்ளது. சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து கேள்வி ஒன்றை பெண் பத்திரிகையாளர் அப்சா கோமல் முன்வைத்தார்.
அதற்கு பதிலளித்து பேசிக்கொண்டிருந்த அதிகாரி ஷெரிப், இம்ரான் கான் ஒரு மனநல நோயாளி, அவர் ஒரு “தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்”, “அரச விரோதி” மற்றும் இந்தியாவுக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்று குற்றம்சாட்டினார். இறுதியாக ஷெரிப் சிரித்துக்கொண்டே, நிரூபர் கோமலைப் பார்த்து கண் அடித்தார். இவரது இந்த செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பயனர் ஒருவர் கூறியதாவது, . சீருடையில் இருக்கும் ஒருவர் எப்படி இப்படி பொதுவில் கண் அடிக்க முடியும்?” இந்த பத்திரிகையாளர் சந்திப்பு சாதாரண நிகழ்வு அல்ல, மாறாக தேசிய பாதுகாப்பு தொடர்பான விஷயம் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். அத்தகைய நேரத்தில் இராணுவத்தின் உயர் ஊடக அதிகாரியின் இந்த நடத்தை மிகவும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.
ராணுவ அதிகாரியின் நடத்தை அவர்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்றும் சிலர் சுட்டிக்காட்டினர். பல பயனர்கள் இது ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை விட ஒரு காதல் நிகழ்ச்சி போல உணர்ந்ததாக கிண்டலாக எழுதினர்.
இதனை தொடர்ந்து அதிகாரி ஷெரிப்பின் பின்னணியும் தற்போது கவனத்தை ஈர்த்துள்ளது. பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட சுல்தான் பஷிருதீன் மஹ்மூத்தின் மகன் மற்றும் ஒசாமா பின்லேடனின் உதவியாளராக ஷெரிப் இருந்ததாக கூறப்படுகிறது.
