குளிர்கால ஒலிம்பிக் விழாவின் துவக்கமான ஒலிம்பிக் ஜோதியை பிரபல நடிகர் ஜாக்கி சான் ஏந்திச் சென்றார்.
71 வயதைக் கடந்தும் இன்றும் இளமைத் துடிப்புடன் செயல்படும் நடிகர் ஜாக்கி சானுக்கு அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் ஆசதர்சன நாயகனாவார். ‘தி லெஜெண்ட் ஆப் டிரங்கன் மாஸ்டர்’, ‘போலீஸ் ஸ்டோரி’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர். ஜாக்கி சானின் அசாத்திய சண்டை காட்சிகளுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.
சுவிட்ஸர்லாந்தில் 78வது ‘லோகார்னோ திரைப்பட விழாவில்’ ஜாக்கி சானுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்நிலையில், 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள மிலன்- கோர்டினா குளிர்கால ஒலிம்பிக்ஸ்-க்கான ஒலிம்பிக் ஜோதியை ஜாக்கி சான் ஏந்திச் சென்றார். இத்தாலியில் உள்ள பாம்பேய் என்ற பழமையான இடத்தில் ஒலிம்பிக் ஜோதியை அவர் ஏந்திச் சென்றார்.
2022 பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்ஸ் உட்பட பலமுறை ஒலிம்பிக் ஜோதியை ஜாக்கி சான் ஏந்திச் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
