பணயக் கைதிகளை விடுவித்து, ஆயுதங்களை ஹமாஸ் அமைப்பினர் ஒப்படைத்தால் காசாவில் நாளையே போர் முடிந்துவிடும் என நெதன்யாகு கூறியுள்ளார்.
காசாவில் உள்ள ஹாமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே ஒரு ஆண்டு கடந்தும் போர் நடந்து வருகிறது. காசா மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராகி வருகிறது. அதற்கு உலக நாடுகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், இஸ்ரேல் போரை நிறுத்துவதாக இல்லை. இந்த நிலையில்,
இது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறுகையில்,
”காசாவை ஆக்கிரமிப்பது எங்கள் நோக்கமல்ல. அதை விடுவிப்பதுதான் இலக்கு. ஆனால், இஸ்ரேலுக்கு உள்ளேயும், வெளியேயும் சர்வதேச அளவில் பொய் பிரசாரம் நடந்து வருகிறது. காசாவை ராணுவமயத்தில் இருந்து விடுவித்தல், இஸ்ரேல் ராணுவம் பாதுகாப்பை மேற்கொள்ளுதல், இஸ்ரேல் அல்லாத சிவில் நிர்வாகம் பொறுப்பேற்றல் ஆகியவைதான் எங்கள் இலக்குகள்.
நிறைய வெளிநாட்டு பத்திரிகையாளர்களை அழைத்து வந்து காட்டுமாறு இஸ்ரேல் ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளேன். பணயக் கைதிகளை விடுவித்து, ஆயுதங்களை ஹமாஸ் அமைப்பினர் ஒப்படைத்தால் காசாவில் நாளையே போர் முடிந்துவிடும்” எனக் கூறியுள்ளார்.