Close Menu
    What's Hot

    இலக்கு மாறிய ஏவுகணை; சிதறிய உயிர்கள்!. நைஜீரிய அரசின் தவறால் நிகழ்ந்த 100 பேர் மரணம்!

    நெல் சாகுபடி ஊக்கத்தொகை!. கடிதத்தை வெளியிட தயாரா?. நிர்மலாவுக்கு ஸ்டாலின் சவால்!.

    தொடர் சரிவில் தங்கம் விலை!. இன்றைய ரேட் என்ன தெரியுமா?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»உலகம்»செங்கோட்டை முதல் காஷ்மீர் வரை இந்தியாவை தாக்கினோம் – பாக். அரசியல் பிரமுகர்
    உலகம்

    செங்கோட்டை முதல் காஷ்மீர் வரை இந்தியாவை தாக்கினோம் – பாக். அரசியல் பிரமுகர்

    Editor TN TalksBy Editor TN TalksNovember 19, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    paks
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    செங்கோட்டை முதல் காஷ்மீர் காடுகள் வரை இந்தியாவை தாக்கியுள்ளதாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முன்னாள் ‘பிரதமர்’ என அறியப்படும் பாகிஸ்தான் அரசியல் பிரமுகர் சவுத்ரி அன்வர் உல் ஹக் தெரிவித்துள்ளார்.

    இந்தியாவுக்கு எல்லை தாண்டிய பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்குகிறது பாகிஸ்தான். இந்தச் சூழலில் கடந்த ஏப்ரலில் நடந்த பஹல்காம் தீவிரவாத தாக்குதல் மற்றும் அண்மையில் டெல்லி – செங்கோட்டையில் நடந்து கார் குண்டு வெடிப்பு தற்கொலை படை தாக்குதலை சுட்டிக்காட்டி சவுத்ரி அன்வர் உல் ஹக் பேசியுள்ளார்.

    “பலூசிஸ்தானில் அமைதியற்ற சூழல் தொடர்ந்தால் இந்தியாவை செங்கோட்டை முதல் காஷ்மீர் காடுகள் வரை தாக்குவோம் என நான் முன்பே சொல்லி இருந்தேன். இறைவனின் அருளால் நாம் அதை செய்துள்ளோம். அவர்கள் இன்னும் உயிரிழந்தவர்களின் உடல்களை எண்ணிக் கொண்டுள்ளனர். ஆயுதத்துடன் டெல்லிக்குள் நுழைந்த நபர், இந்த தாக்குதலை நடத்தினார்” என சவுத்ரி அன்வர் உல் ஹக் கூறியுள்ளார்.

    பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் பகுதியில் நிலவும் அமைதியற்ற சூழலுக்கு இந்தியாதான் காரணம் என பாகிஸ்தான் தற்போது தொடர்ந்து கூறி வருகிறது. அண்மையில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்றத்துக்கு வெளியே நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர், 20 பேர் காயமடைந்தனர்.

    இந்த தாக்குதலுக்கு தெரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) தீவிரவாத படை பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில், இந்தத் தாக்குதலுக்கு இந்தியாதான் காரணம் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்திருந்தார். இப்படி இந்தியா மீது தொடர்ந்து பழி சொல்லி வருகிறது பாகிஸ்தான். இதற்கு முன்பும் பாகிஸ்தானை சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் இந்தியா மீது இது மாதிரியான குற்றச்சாட்டுகளை வைத்தது உண்டு.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநான் காப்புரிமை கேட்பதில்லை – தேவா
    Next Article புதுச்சேரி அதிமுக முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் கட்சியிலிருந்து திடீர் விலகல்
    Editor TN Talks

    Related Posts

    இலக்கு மாறிய ஏவுகணை; சிதறிய உயிர்கள்!. நைஜீரிய அரசின் தவறால் நிகழ்ந்த 100 பேர் மரணம்!

    April 13, 2026

    ஹைதி கோட்டை கூட்ட நெரிசலில் 30 பேர் பரிதாப பலி! திடீர் மழையால் நேர்ந்த சோகம்!

    April 13, 2026

    ஒரே நாளில் ஆசியாவை உலுக்கிய நிலநடுக்கங்கள்!. மியான்மர் முதல் ஆப்கான் வரை குலுங்கிய பூமி!.

    April 12, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இலக்கு மாறிய ஏவுகணை; சிதறிய உயிர்கள்!. நைஜீரிய அரசின் தவறால் நிகழ்ந்த 100 பேர் மரணம்!

    நெல் சாகுபடி ஊக்கத்தொகை!. கடிதத்தை வெளியிட தயாரா?. நிர்மலாவுக்கு ஸ்டாலின் சவால்!.

    தொடர் சரிவில் தங்கம் விலை!. இன்றைய ரேட் என்ன தெரியுமா?

    ஹைதி கோட்டை கூட்ட நெரிசலில் 30 பேர் பரிதாப பலி! திடீர் மழையால் நேர்ந்த சோகம்!

    “உலகளவில் தனி பிராண்டாக மாறும் தமிழ்நாடு!” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.