Close Menu
    What's Hot

    சொத்தை பழம் போல் இன்றைய பட்ஜெட்!. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!.

    இடைக்கால பட்ஜெட்டை 2 மணிநேரம் 22 நிமிடம் வாசித்த தங்கம் தென்னரசு!.

    பட்ஜெட்டில் இளைஞர்களுக்கு குட்நியூஸ்!. கைத்தறி, கதர் துறைக்கு ரூ.1,943 கோடி ஒதுக்கீடு!. 

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»LIFESTYLE»கசப்பே இல்லாத சுவையான பாகற்காய் புளிக்குழம்பு செய்ய வேண்டுமா.. ரெசிபி இதோ!
    LIFESTYLE

    கசப்பே இல்லாத சுவையான பாகற்காய் புளிக்குழம்பு செய்ய வேண்டுமா.. ரெசிபி இதோ!

    Editor TN TalksBy Editor TN TalksMay 22, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    bitter 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    காய்கறிகளில் பெரும்பாலான நபர்களால் விரும்பப்படாத காய்கறியாக பாகற்காய் கருதப்படுகிறது. ஆனால் உண்மையில், அதிகளவு ஊட்டச்சத்துக்களும், பல ஆரோக்கிய நன்மைகளும் நிரம்பிய காய்கறியே பாகற்காய். இதனை மக்கள் தவிர்க்கும் முக்கியக் காரணம் அதன் கடுமையான கசப்பு சுவைதான். இருப்பினும், ஆரோக்கியமாக வாழ விரும்பும் அனைவரும் தங்கள் உணவில் பாகற்காயை அடிக்கடி சேர்த்துக்கொள்வது மிகவும் அவசியம்.

    பாகற்காயை சாப்பிட முடியவில்லை, கசப்பால் எடுக்கவே முடியவில்லை என்று சிலர் சொல்வதுண்டு. அவர்களுக்கான மிகச்சிறந்த வழி, பாகற்காயை கசப்பே தெரியாமல் சமைப்பது. பொதுவாக, பாகற்காயை பொரியல் செய்து சாப்பிடுவார்கள்; சில சமயங்களில் சாம்பாரிலும் பயன்படுத்துவார்கள். ஆனால் உண்மையில், பாகற்காயை சுவையாகவும், கசப்பே இல்லாமல் சமைக்கும் சிறந்த முறை புளிக்குழம்பாக வைப்பதுதான்.

    செட்டிநாடு பகுதிகளில் இந்த பாகற்காய் புளிக்குழம்பு மிகவும் பிரபலமான ஒரு பாரம்பரிய உணவாகும். இப்போது, இந்தச் சுவையான புளிக்குழம்பை எவ்வாறு எளிமையாகச் சமைக்கலாம் என்பதை பார்ப்போம்.

    தேவையான பொருட்கள்:

    பாகற்காய் – 2 (நடுத்தர அளவு)

    புளி –  2 கப் புளிச்சாறு கிடைக்கும் அளவு

    சாம்பார் தூள் – 1 டேபிள்ஸ்பூன்

    மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

    உப்பு – தேவையான அளவு

    தக்காளி – 1 (நறுக்கியது)

    வெங்காயம் – 10 (சின்ன வெங்காயம் சிறந்தது)

    பூண்டு – 5 பற்கள்

    நல்லெண்ணை – 3 டேபிள்ஸ்பூன்

    தாளிக்க:

    கடுகு – 1/2 டீஸ்பூன்

    கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன்

    வெந்தயம் – 1/2 டீஸ்பூன்

    பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை

    கறிவேப்பிலை – ஒரு சிறிய கொத்து

    bitter

    செய்முறை:

    பாகற்காயின் இரண்டு முனைகளையும் வெட்டிவிட்டு, நீளவாக வட்டங்களாக நறுக்கவும். இதனை கொதிக்கும் நீரில் சிறிது சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து 5 நிமிடங்கள் வேக வைக்கவும். இதனால் பாகற்காயின் கசப்பு குறையும். பின் நீர் வடித்து வைக்கவும்.

    புளியை 1/2 மணி நேரம் நீரில் ஊறவைத்து நன்கு பிழிந்து 2 கப் புளிச்சாறாக எடுத்துக்கொள்ளவும். (இந்த புளிக்குழம்பு சுவையாக இருக்க, புளிப்பு சிறிது அதிகமாக இருக்கலாம்.)

    பூண்டு, சின்ன வெங்காயம் உரித்துக் கொள்ளவும். தக்காளியை பொடியாக நறுக்கவும்.

    ஒரு வாணலியில் எண்ணையை ஊற்றி காய்ந்ததும், கடுகு போட்டு தாளிக்கவும். அதன் பிறகு கடலைப்பருப்பு, வெந்தயம், பெருங்காயத்தூள் சேர்த்து சிவக்கும் வரை வறுக்கவும்.

    வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் தக்காளி சேர்த்து மென்மையாக்கவும். இதில் சாம்பார் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும்.

    பின் பாகற்காயையும், தயாராக வைத்த புளிச்சாறையும், தேவையான உப்பையும் சேர்த்து நன்றாக கலக்கவும்.

    இடுப்பை மூடிவிட்டு மிதமான தீயில் 10-15 நிமிடங்கள் கொதிக்க விடவும். குழம்பு நன்றாகக் கெட்டியாகி எண்ணை மிதமாக பிரிந்து வந்ததும் அடுப்பை அணைக்கலாம்.

    இக்குழம்பை சூடான சாதத்தில் ஊற்றி, பக்கத்தில் அப்பளம் வைத்துக் கொண்டு சாப்பிட்டால், அதுபோன்ற சுவை வேறேதும் இல்லை.

    bitter gourd bitter gourd puli kulambu bitter gourd tamarind curry chettinad bitter gourd curry chettinad kulambu easy kulambu recipe healthy kulambu recipe no bitter taste gourd curry pavakkai curry without bitterness pavakkai kulambu recipe pavakkai puli kulambu South Indian kulambu Tamil recipes tangy curry recipe கசப்பில்லா பாகற்காய் கசப்பில்லாத பாகற்காய் சுவையான பாகற்காய் குழம்பு சுவையான புளிக்குழம்பு செட்டிநாடு புளிக்குழம்பு பாகற்காய் பாகற்காய் குழம்பு பாகற்காய் குழம்பு செய்முறை பாகற்காய் குழம்பு ரெசிபி பாகற்காய் சுவையாக பாகற்காய் புளிக்குழம்பு பாகற்காய் ரெசிபி பாகற்காய் வையலாக புளிச்சாறு குழம்பு
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவீட்ல 1/2 கப் ரவை இருக்கா.. அப்போ வாங்க சுவையான ரசகுல்லா செய்யலாம்!!
    Next Article பாஜகவினால் இயக்கப்படும் கைகூலியா நடிகர் விஜய் … வன்னி அரசு கூறியதென்ன?
    Editor TN Talks

    Related Posts

    மொபைல் போனை தலைக்கு அருகில் வைத்து தூங்குகிறீர்களா?. கேன்சர் ஆபத்து!. 

    February 12, 2026

    சமையலறையில் எண்ணெய் கறைகள் உள்ளதா?. ஈசியா சுத்தம் செய்ய சூப்பர் டிப்ஸ்!.

    February 8, 2026

    அதிகாலையில் எழுந்ததும் இதைச் செய்யுங்கள்!. வயிறு முற்றிலும் சுத்தமாகிவிடும்!.

    February 8, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சொத்தை பழம் போல் இன்றைய பட்ஜெட்!. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!.

    இடைக்கால பட்ஜெட்டை 2 மணிநேரம் 22 நிமிடம் வாசித்த தங்கம் தென்னரசு!.

    பட்ஜெட்டில் இளைஞர்களுக்கு குட்நியூஸ்!. கைத்தறி, கதர் துறைக்கு ரூ.1,943 கோடி ஒதுக்கீடு!. 

    ஜிஎஸ்டியால் நடப்பாண்டில் ரூ.9,600 கோடி இழப்பு ஏற்படும்!. தங்கம் தென்னரசு!

    சிறுபான்மையினர் நலத்துறைக்கு ரூ.1634 கோடி ஒதுக்கீடு!. தங்கம் தென்னரசு!.

    Trending Posts

    மருத்துவத்துறைக்கு ரூ.22,090 கோடி; எரிசக்தித்துறைக்கு ரூ.18,301 கோடி ஒதுக்கீடு!. தங்கம் தென்னரசு!

    February 17, 2026

    ஜிஎஸ்டியால் நடப்பாண்டில் ரூ.9,600 கோடி இழப்பு ஏற்படும்!. தங்கம் தென்னரசு!

    February 17, 2026

    காங்கிரஸ் தலைவராக ஈராண்டுகள் நிறைவு..! செல்வப்பெருந்தகை செய்தது என்ன?

    February 17, 2026

    இடைக்கால பட்ஜெட்டை 2 மணிநேரம் 22 நிமிடம் வாசித்த தங்கம் தென்னரசு!.

    February 17, 2026

    சிறுபான்மையினர் நலத்துறைக்கு ரூ.1634 கோடி ஒதுக்கீடு!. தங்கம் தென்னரசு!.

    February 17, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.