குளிர்காலம் என்பது சூடான பானங்களை குடிப்பதற்கு ஏற்ற காலமாகும். இந்த காலக்கட்டத்தில் நாம் அடிக்கடி டீ மற்றும் காபியை நிறைய குடிக்கிறோம். இருப்பினும், ஆரோக்கியமான விருப்பங்களைப் பொறுத்தவரை, சூடான சூப்கள் மற்றும் வடிச்சாறு (Broth) மிகவும் பிரபலமான தேர்வுகளாகும். ஆனால் குளிர்காலத்தில் எது சிறந்தது?, எது எளிதில் ஜீரணிக்கும்? என்று நீங்கள் யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா?
அப்படியானால் இந்த செய்தி உங்களுக்கானது.
குளிர்காலத்தில் சூடான சூப்களின் நன்மைகள்:
குளிர்கால மாதங்களில் சூடான சூப்கள் மிகவும் சத்தான பானங்களில் ஒன்றாகும். இந்த குளிர் மாதங்களில் சூப்களின் நன்மைகளை குறித்து டாக்டர் சோப்ரா விளக்கமளித்துள்ளார்.
சூப்களானது காய்கறிகள், ப்ரோடீன்கள், மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்களின் கலவையைக் கொண்டுள்ளது. எனவே, இது மிகவும் ஆரோக்கியமான மற்றும் முழுமையான உணவை வழங்குகிறது.
இதன் சூடு மூக்குப் பாதைகளைத் திறக்கவும், தொண்டையை ஆற்றவும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. சூப்களில் காய்கறிகளை சேர்ப்பதால் அதில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. எனவே, இது செரிமானத்தை ஆதரிக்கிறது, வயிறு நிரம்பிய உணர்வை அளிக்கிறது மற்றும் இரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்துகிறது.
இதன் சூடு செரிமானப் பாதையை தளர்வாக்கி, வயிற்று உப்புசத்தைக் குறைக்கிறது.
குளிர் மாதங்களில் தண்ணீர் குறைவாக குடிப்பதால் அடிக்கடி ஏற்படும் நீரிழப்பை சரி செய்யவும் இது உதவுகிறது.
டாக்டர் சோப்ரா பரிந்துரைத்த சில பிரபலமான சூப்களானது, ப்ரோக்கோலி பாதாம் சூப் (நோய் எதிர்ப்பு சக்திக்காக), கிரீன் காடஸ் சூப் (நச்சு நீக்கத்திற்காக) மற்றும் அவரது சிறப்பு ரோஸி சீக்ஸ் சூப் (தோல் ஆரோக்கியத்திற்காக) ஆகியவை ஆகும்.
குளிர்காலத்தில் வடிச்சாறு நன்மைகள்:
வடிச்சாறுகள், குறிப்பாக எலும்பு மற்றும் காய்கறி வேக வைத்த வடிச்சாறு என எதுவாக இருந்தாலும் சரி, அவை மிகவும் லேசானவை மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. ஏனெனில் அவற்றில் அமினோ ஆசிட்கள், மினெரல்கள், எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் கொலாஜன் ஆகியவை நிறைந்துள்ளன, என்று டாக்டர் சோப்ரா கூறியுள்ளார்.
வடிச்சாறு , மூட்டு ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் நீரேற்றத்தை ஆதரிக்கின்றன.
வடிச்சாறு சூடான மற்றும் திரவ வடிவம் அவற்றை ஜீரணிக்க எளிதாக்குகிறது. மேலும், நோயிலிருந்து மீள்பவர்களுக்கு, குடல் அழற்சியை அனுபவிப்பவர்களுக்கு அல்லது குளிர்கால மாதங்களில் பசியின்மை உள்ளவர்களுக்கு அவை சிறந்தவை.
வடிச்சாறு வளர்சிதை மாற்ற வெப்பத்தை அதிகரிக்கவும், ஊட்டச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்தவும் உதவுகிறது.
வடிச்சாறுகளில் குறைந்த அளவு பொருட்களும், குறைந்த அளவு நார்ச்சத்தும் இருப்பதால், செரிமான அமைப்பு கடினமாக உழைக்க வேண்டியதில்லை. எனவே உணர்திறன் வாய்ந்த வயிறு உள்ளவர்கள், வயதானவர்கள் உட்பட அனைவருக்கும் இது ஒரு சிறந்த தேர்வாகும்.
சூடான சூப் vs வடிச்சாறு: குளிர்காலத்தில் எது சிறந்தது?
சூடான சூப் மற்றும் வடிச்சாறு ஆகிய இரண்டும் வெவ்வேறு நோக்கங்களுக்கு உதவுகின்றன. உங்கள் உடலுக்கு என்ன தேவை என்பதைப் பொறுத்து நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று டாக்டர் சோப்ரா கூறியுள்ளார்.
நீங்கள் ஒரு ஆரோக்கியமான, நிறைவான, ஊட்டச்சத்து நிறைந்த உணவை விரும்பினால், சூடான சூப் சிறந்தது. ஏனெனில் இதில் உங்களுக்கு காய்கறிகள், ப்ரோடீன், நார்ச்சத்து மற்றும் நீரேற்றம் ஆகியவற்றை அனைத்தையும் ஒரே நேரத்தில் வழங்குகிறது.
நீங்கள் லேசான, இனிமையான, குடலுக்கு ஏற்ற ஒன்றை விரும்பினால், அல்லது நீங்கள் நோயிலிருந்து மீண்டு வருகிறீர்கள் என்றால், வடிச்சாறு சிறந்தது. இது வயிற்றுக்கு மிகவும் மென்மையாக இருக்கும் அதே வேளையில், ஊட்டச்சத்துக்களையும் தருகிறது.
சூடான சூப் vs வடிச்சாறு: குளிர்காலத்தில் ஜீரணத்துக்கு எது சிறந்தது?
செரிமானத்திற்கு சிறந்தது: வடிச்சாறு
வயிறு நிரம்பிய உணர்வு மற்றும் ஊட்டச்சத்துக்கு சிறந்தது: சூடான சூப்
குளிர்கால ஆரோக்கியத்திற்கு ஒட்டுமொத்தமாக சிறந்தது: இரண்டுமே
