2026ல் புதிய வகையில் கூட்டணி ஆட்சி அமையவே 100 சதவீதம் வாய்ப்பு உள்ளதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் நடந்த தேமுதிகவின் வாக்குச்சாவடி முகவர் ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்று பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடலூரில் ஜனவரி 9ம் தேதி நடைபெற உள்ள மாநாட்டில் கூட்டணி குறித்த அறிவிப்பு இருக்கும் என்றார். கட்சியைப் பலப்படுத்தி, மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும் என்றார். தான் செல்லும் இடமெல்லாம் மகத்தான வரவேற்பு உள்ளதாகவும் பிரேமலதா விஜயகாந்த் குறிப்பிட்டார்.

ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என 2026ல் புதிய வகையில் கூட்டணி ஆட்சி அமையவே 100 சதவீத வாய்ப்பு உள்ளதாகவும் பிரேமலதா விஜயகாந்த் கூறினார். திமுக ஆட்சிக்கு 50/50 என மதிப்பெண் கொடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். வடமாநில மக்கள் அதிகளவில் திருப்பூரில் உள்ளதாக  தெரிவித்த பிரேமலதா விஜயகாந்த், இங்குள்ளவர்கள் வாக்கை எடுத்துவிட்டு புதிதாக வந்தவர்களுக்கு வாக்கு வழங்குவது என்பதை தேமுதிக எதிர்ப்பதாக  குறிப்பிட்டார். எங்கு பிறந்தார்களோ அங்கு தான் அவர்களுக்கு வாக்கு இருக்க வேண்டும் என்றார்.

செங்கோட்டையன், தவெக, அதிமுக உட்கட்சி குறித்த கேள்விகளுக்கு நோ கமெண்ட்ஸ் என்று பிரேமலதா விஜயகாந்த் பதிலளித்தார். ஸ்டாலின், விஜய் இவர்களில்  யார் தளபதி என்ற கேள்விக்கு, நாட்டுக்காக ராணுவத்தில் எல்லையில்  உள்ளவர்கள் தான் உண்மையான இந்தியாவின் தளபதி என்று அவர் கூறினார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version