அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றாலே திமுக பயந்து நடுங்குவதாக அதிமுக தரப்பில் விமர்சிக்கப்பட்டுள்ளது.
டெல்லி சென்றுள்ள எடப்பாடி பழனிசாமி அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளார். இந்த சூழலில் இது குறித்து அதிமுக எக்ஸ் தளத்தில் விமர்சித்துள்ளது. அதில், “எடப்பாடியார் அவர்கள் டெல்லி சென்றாலே பயந்து நடுங்கும் திமுக மற்றும் திமுக ஆதரவு ஊடகங்களுக்கு. முகத்தை துடைப்பதை, முகத்தை மூடிக்கொண்டு செல்வதாக Fake Narative செட் பண்ணும் வேலைகள் ஈடுபடும் திமுகவிற்கு..
எடப்பாடியார் ஒன்றும் ஆட்சிக்கு வருவதற்கு முன் கருப்பு balloonனை பறக்க விட்டு; ஆட்சிக்கு வந்த பின் வெள்ளை குடையுடன் செல்லவில்லை.. வெளிப்படையாக மாண்புமிகு உள்துறை அமைச்சரை சந்திக்க சென்றார் என்பது நாடறியும். சந்திப்பு முடிந்ததும் முகத்தை மூடிக்கொண்டு செல்லும் அவசியம் அவருக்கில்லை.
கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்து, ஆட்சிக்கு வந்த பின் எந்த ஒரு வாக்குறுதியும் நிறைவேற்றாத நீங்கள் தான் முகத்தை மூடிக்கொள்ள வேண்டும், தமிழகத்தில் சட்ட ஒழுங்கை பாதுகாக்க முடியாமல் சிறுவர் முதல் கிழவி வரை நடமாட பயப்படும் நிலையை உருவாக்கிய நீங்கள் தான் முகத்தை மூடிக்கொள்ள வேண்டும். தேர்தல் வருகிற நிலையில் மக்களை எதிர்கொள்ள முடியாமல் நீங்கள்தான் முகத்தை மூடிக்கொள்ள வேண்டும்,
சந்திப்பின் நிகழ்வுகளை மாண்புமிகு எடப்பாடியார் ஊடகங்களை சந்தித்து விபரிக்கும் போது நீங்கள் முகத்தை மறைத்து திருப்பிக் கொண்டுதான் செல்ல வேண்டும்” என விமர்சிக்கப்பட்டுள்ளது.