தமிழ்நாடு தேர்தலுக்கான திமுக மற்றும் காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகள் ஏற்கெனவே மந்தமடையத் தொடங்கியுள்ளன. இதற்குக் காரணம், கூட்டணிக் கட்சிகள் காங்கிரஸின் அடையாளத்தை அரித்து வருவதால், ‘இந்தியா’ கூட்டணியின் யோசனை இறுதியில் முடிவுக்கு வர வேண்டும் என்று கருதும் ராகுல் காந்தியைப் போலவே, அந்தக் கட்சியின் பலரும் சிந்திக்கத் தொடங்கியிருப்பதுதான்.
உண்மையில், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு, ராகுல் காந்தி தவெக தலைவரான விஜயை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோதுதான், காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் மற்ற கூட்டாளிகளைத் தேடுகிறது என்பதற்கான முதல் அறிகுறி வெளிப்பட்டது.
பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் விஜய்யை அமைதியாகத் தங்கள் பக்கம் ஈர்க்க முயற்சிக்கும் நிலையில், தங்களின் எதிரி திமுக என்பதில் மிகவும் தெளிவாக உள்ளார் விஜய்.
விஜய்யை கடுமையாகத் தாக்க விரும்பவில்லை என்றாலும், விஜய் ஈர்க்கும் வாக்கு வங்கி, அதாவது பெண்களும் இளைஞர்களும்தான் தாங்கள் குறிவைக்கும் வாக்கு வங்கி என்பதை திமுக நன்கு அறியும்.
இந்த காரணத்தினால்தான், மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி புதிய கூட்டாளிகளைத் தேடும் யோசனையில் ஈடுபட்டுள்ளது. இதுவே, கட்சியின் பல தொண்டர்கள் டெல்லி காங்கிரஸ் தலைமைக்குத் தெரிவித்துள்ள கருத்தாகவும் இருக்கிறது.
தமிழ்நாட்டுக் காங்கிரசின் பொறுப்பாளராக உள்ள கிரிஷ் சோதாங்கர் தெரிவித்ததாவது, தமிழ்நாட்டுக்கான தனது சொந்த கண்ணோட்டத்தை காங்கிரஸ் கட்சி முன்னிறுத்தும், தமிழ் வாக்களர்களுக்கு நமது வாக்குறுதிகளை வழங்கி, அதைப் பின்பற்றி, அதிகாரப் பகிர்வு செய்து, அரசின் ஒரு பகுதியாக செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.
இது காங்கிரஸ் இன்னும் DMK உடன் கூட்டணியை முடிக்க முடிவு செய்துவிட்டதாக பொருள் கொள்ள முடியாது. இருப்பினும், தற்பொழுது மொத்தம் 17 இடங்களே காங்கிரசிடம் உள்ள நிலையில், சிலர் அவர்கள் சிறிது ரிஸ்க் எடுக்க முடியும் என்று வட்டாரங்கள் கூறுகின்றன.
