ருத்ராட்சம் அணிவது குறித்து அண்ணாமலை தெரிவித்த கருத்து பிற்போக்குத்தனமானது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
கோவை மாவட்ட கல்வித் துறை சார்பில் “கற்றல் அடைவு” குறித்த ஆய்வு கூட்டம் புரூக்பீல்ட்ஸ் சாலையில் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் நடந்தது. கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார், மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் கோவை மாவட்ட அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கலந்து கொண்டு பல்வேறு விஷயங்கள் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒவ்வொருவருக்கும் மதம் சார்ந்த நம்பிக்கை உள்ளது அதில் யாருடைய தலையிடும் இருக்க கூடாது, பள்ளிக்கூடம் என்பது பொதுவான ஒரு இடம் அங்கு அறிவு சார்ந்த விஷயங்களை சொல்லித் தாருங்கள் என்று அறிவுரை கூற வேண்டும் என்றார்.
அதை விட்டு ருத்ராட்சம் அணிவது போன்று கூறுவதை தான் பிற்போக்குத்தனம் என்று நான் குறிப்பிடுகிறேன் என்றார். நம்பிக்கைகள் யாரும் தலையிடக்கூடாது ஆனால் அதனை கட்டாயப்படுத்தும் பொழுது பள்ளிகளில் அனைவரையும் ஒன்றாக பார்க்க வேண்டும், மதம் சார்ந்து அவ்வாறு செய்கிறோம் என்று அவர்கள் கூறினால் நீட் தேர்வு எழுதும் பொழுது தாலியை கூட கழட்டி வைத்துவிட்டு எழுதுங்கள் என்று கூறுகிறார்களே அங்கொன்றும் இங்கொன்றும் பேசக்கூடாது என்றார்.
ஒவ்வொரு பள்ளிகளுக்கும் தனியாக ரிப்போர்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளது என்றார். கோவையில் சூலூர் மற்றும் தொண்டாமுத்தூர் பகுதி பள்ளிகள் சற்று பின்தங்கி உள்ளது என்றார். ஹைடெக் லேப் டெண்டர் பணிகளை பைனான்ஸ் பிரிவு பார்த்துக் கொள்கிறது என்றும் எஸ் எஸ் ஏ யை பொறுத்தவரை பணம் வரவில்லை , தமிழக அரசு முதல் தவணை ஆகிய 700 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது என்றார்.
ஆர் டி ஆக்ட் தனியார் பள்ளிகளில் நம் பிள்ளைகளை சேர்க்கின்ற ஒரு ஆக்ட் அது, மத்திய அரசு அதற்கான 600 கோடி ரூபாய் பணத்தை தரவில்லை நாம் தந்திருக்க கூடிய பணத்தையும் அவர்கள் தரவில்லை என கூறிய அவர், நாம் நம்பி அவர்களுக்கு( மத்திய அரசு) அட்வான்ஸ் அளித்த பணத்தை கூட அவர்கள் தரவில்லை என்று குற்றஞ்சாட்டினார்.