திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறாது என்று தமிழக பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

டெல்லி செல்லும் வழியில் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறக்கூடும் என வெளியாகி வரும் தகவல் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அண்ணாமலை, “அப்படி எனக்கு தோன்றவில்லை. திமுக கூட்டணியில் கூடுதல் தொகுதிகளை பெற காங்கிரஸ் சில நகர்வுகளை செய்வது போலவே தெரிகிறது” என பதிலளித்தார்.

டிடிவி தினகரனுக்கு கோவையில் உள்ள தனது இல்லத்தில் விருந்து அளித்தது குறித்த கேள்விக்கு, அவருடனும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்-சுடனும் தனக்கு நல்ல நட்பு உண்டு என்று அண்ணாமலை கூறினார்.

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வலுவான கூட்டணியுடன்  பாஜக போட்டியிடுகிறது என்றும், அத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version