அதிமுகவும் அமைப்பு செயலாளர் அன்வர் ராஜா அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவர் அன்வர் ராஜா. எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு அதிமுக இரண்டாக உடைந்த போது ஜானகி அணிக்கு சென்றார் அன்வர் ராஜா. 2001 முதல் 2006 வரை அதிமுக ஆட்சியில் தொழிலாளர் துறை அமைச்சராக பணிபுரிந்தார். 2014 முதல் 2109 வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். ஈபிஎஸ் தலைமையிலான அதிமுகவில் இருந்து வந்த அன்வார் மீண்டும் பாஜக உடன் கூட்டணி வைத்ததால் அதிருப்பதியில் இருந்துள்ளார்.
சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த அன்வர் ராஜா, பாஜக தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது என பேசியிருந்தது பேசுபொருளானது. பாஜகவுன் கூட்டணி வைத்ததால் அதிமுகவிற்கு சிறுபான்மையினர் வாக்குகள் கிடைக்காது என்றும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், அதிமுகவில் இருந்து விலகி இருக்கிறார் அன்வர் ராஜா. அன்வர் ராஜா அண்ணா அறிவாலயம் சென்ற தகவல் வெளியான நிலையில் அவரை அதிமுக கட்சியில் இருந்து நீக்கி அறிக்கை வெளியிட்டார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், அதிமுகவில் இருந்து விலகிய அன்வர் ராஜா, திமுகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.