சென்னை நேரு உள்விளையாட்டு செப்டம்பர் 25-ந் தேதி நடைபெறும் கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பங்கேற்க உள்ளதாக அரசு செய்தித்தொடர்பாளர் அமுதா ஐ.ஏ.எஸ். கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில், கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற தலைப்பில், தமிழ்நாடு அரசு கல்வியில் செய்த சாதனைகள், சிறப்புகள் குறித்த மாபெரும் கொண்டாட்டம் நடைபெற உள்ளது. நான் முதல்வன், தமிழ் புதல்வன், புதுமைப்பெண் உள்ளிட்ட 7 திட்டங்களை உள்ளடக்கி இந்த சிறப்பு நிகழ்ச்சி நடைபெறும்.
வருகிற 25 ஆம் தேதி நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறும். இந்த கல்வியில் சிறந்த தமிழ்நாடு விழாவில், தெலுங்கான முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார். இத்திட்டம் விரிவாக்கம் குறித்து அறிவிப்பு வெளியாக உள்ளது. 4 முதல் 7 மணி வரை மேற்கண்ட திட்டங்கள் குறித்து அதில் பயன்பெற்ற சாதனையாளர்கள் எடுத்துரைக்க உள்ளனர். 2.57 லட்சம் மாணவ மாணவியர்கள் பயன்பெற உள்ளனர்.
நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 14.60 லட்சம் பேர் பயன் பெற்றுள்ளனர். புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் 5.29 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் மூலமும் லட்சக்கணக்கான மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.
காலை உணவு திட்டம் 37,416 பள்ளிகளில் பயிலும் 20.59 லட்சம் மாணவர்கள பயன்பெற்று வருகின்றன.
இந்தியாவிலே பெண் பிள்ளை உயர் கல்வியில் பயிலும் அதிகமாக இருக்கும் மாநிலம் தமிழ்நாடு தான். அதே போல் இருபாலர் உயர்கல்வியில் சேருவது 75 சதவீதம் ஆகும். பெண் பிள்ளைகள் 5.29 லட்சம் பயன்பெற்று வருகின்றன.
3.92 லட்சம் ஆண் பிள்ளைகள் தமிழ் புதல்வன் திட்டம் மூலம் பயன் பெற்று வருகின்றனர். ரூ.548 கோடி விளையாட்டு கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டு உள்ளது. விளையாட்டு வீரர் வீராங்கனை ஊக்குவிக்கும் வகையில் ரூ.150 கோடி அளவிலான ஊக்க பரிசு வழங்கப்பட்டு உள்ளது. இதுவரை 77 தொகுதியில் மினி விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 12,620 ஊராட்சிகளில் கலைஞர் விளையாட்டு உபகரணகம் ரூ.86 கோடி மதிப்பீட்டில் வழங்கப்பட்டு உள்ளது.
தேசிய கல்வி நிறுவனங்களில் ஒவ்வொரு ஆண்டும் பயிலும் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு வருகிறது. முதல் தலைமுறை மாணவர்கள் பலர் வெளி நாடு மற்றும் உள் நாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்களில் பயில அரசு வழிவகை செய்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.