Close Menu
    What's Hot

    போர் எதிரொலி!. மே 31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!. இஸ்ரேலில் 40,000 இந்தியர்கள் தவிப்பு!

    “இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»அமைச்சர் நேருவுக்கு எதிராக வழக்குப்பதிய வேண்டும்: அண்ணாமலை
    அரசியல்

    அமைச்சர் நேருவுக்கு எதிராக வழக்குப்பதிய வேண்டும்: அண்ணாமலை

    Editor TN TalksBy Editor TN TalksDecember 8, 2025Updated:December 8, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    annamalai
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அமைச்சர் நேருவுக்கு எதிராக அமலாக்கத்துறை சமர்ப்பித்திருக்கும் லஞ்சம், முறைகேடு புகார் குறித்து வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட வேண்டும் என்று பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

    நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கேஎன் நேரு, டெண்டர்களில் முறைகேட்டில் ஈடுபட்டு 1,020 கோடி சம்பாதித்ததாகக் கூறி, தமிழக டிஜிபிக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியுள்ளது. அவர் மீது வழக்குப்பதிவு நடவடிக்கை எடுக்குமாறு குறிப்பிட்டிருந்தது.

    இந்த நிலையில், டெண்டர் முறைகேடு மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை பணியாளர் நியமனத்தில் லஞ்சம் பெற்ற புகார் குறித்து வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட வேண்டும் என்று பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

    அவரது அறிக்கை;

    திமுக ஆட்சியில் ஊழல் நடப்பது என்பது பெரிய விஷயமல்ல. ஆனால், தற்போது மலைபோல ஆதாரங்களுடன் தவிர்க்க முடியாத நிலையில் இருக்கிறது. அமைச்சர் கேஎன் நேரு வேலைவாய்ப்பு நியமனத்திற்கு ரூ.888 கோடி லஞ்சம் வாங்கியதை தொடர்ந்து, தற்போது 1,020 கோடி ஊழல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பாக 252 பக்க அறிக்கையை டிஜிபியிடம் அமலாக்கத்துறை சமர்ப்பித்துள்ளது.

    உறவினர்கள் மூலம் ஒப்பந்ததாரர்களிடம் பணம் வாங்கி, மிகப்பெரிய அளவிலான கொள்ளை நடந்துள்ளது. அதுமட்டுமில்லாமல், வாட்ஸ்அப் உரையாடல்கள், ஹவாலா பணமோசடி குறித்த விபரங்களையும் அமலாக்கத்துறை கொடுத்துள்ளது.

    கடந்த 4 ஆண்டுகளாக திமுக அரசில் சிறப்பாக செயல்பட்ட ஒரே துறை, கலெக்ஷன், கமிஷன் மற்றும் கரப்ஷன் துறை மட்டும் தான். உடனடியாக, டெண்டர் முறைகேடு மற்றும் பணியாளர் நியமனத்தில் லஞ்சம் பெற்ற புகார் குறித்து வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட வேண்டும், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“நகராட்சி நிர்வாகத்துறையில் திமுகவின் ரூ.1,020 கோடி டெண்டர் ஊழல் குறித்து விசாரணை தேவை” – அன்புமணி
    Next Article குடியுரிமை பெற மிகவும் கடினமான நாடுகளாக பார்க்கப்படும் டாப் 10 நாடுகள் !!!
    Editor TN Talks

    Related Posts

    “இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!

    April 6, 2026

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    April 6, 2026

    வானதி அறிமுக கூட்டத்தில் அண்ணாமலை மிஸ்ஸிங்!. “கோவையிலேயே இருந்தும் வராதது ஏன்?. சலசலப்பு!

    April 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    போர் எதிரொலி!. மே 31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!. இஸ்ரேலில் 40,000 இந்தியர்கள் தவிப்பு!

    “இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிறைவு!. நாளை முதல் கோடை விடுமுறை!. மாணவர்கள் உற்சாகம்!

    வானதி அறிமுக கூட்டத்தில் அண்ணாமலை மிஸ்ஸிங்!. “கோவையிலேயே இருந்தும் வராதது ஏன்?. சலசலப்பு!

    Trending Posts

    அடுத்த முதல்வராக ஸ்டாலின் வரவே முடியாது!. பியூஷ் கோயல் பேட்டி!

    April 6, 2026

    வீடியோ காலில் கணவருடன் வாக்குவாதம்!. சென்னையில் சின்னத்திரை நடிகை தற்கொலை!

    April 6, 2026

    தமிழக எம்.பி.க்கள் 6 பேர் பதவியேற்பு!. முதல்முறையாக நாடாளுமன்றம் சென்ற சுதீஷ்!

    April 6, 2026

    தமிழ்நாடு தேர்தல்!. இன்று பிற்பகல் 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு!.

    April 6, 2026

    போர் எதிரொலி!. மே 31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!. இஸ்ரேலில் 40,000 இந்தியர்கள் தவிப்பு!

    April 6, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.