பட்டுக்கோட்டை பாபநாசம் மணப்பாறை ஆகிய தொகுதி நிர்வாகிகளுடன் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு க ஸ்டாலின் இன்று ஒன் டூ ஒன் சந்திப்பு மேற்கொண்டார்.
சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் இருக்கக்கூடிய நிலையில் தேர்தல் பணிகளை திமுக முன்னெடுத்து மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஒன் டூ ஒன் சந்திப்பு நடத்தி வருகிறார்.
தேர்தல் பணிகள் வெற்றி பெற்ற தொகுதிகளில் அதிக எண்ணிக்கையில் இந்த முறை வாக்கு பெறுவது தோல்வி அடைந்த தொகுதிகளில் இந்த முறை வெற்றி பெறுவது மேலும் குறைவான வாக்கு எண்ணிக்கையில் வெற்றியடைந்த தொகுதிகளில் வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் அதிக எண்ணிக்கையில் வாக்கு பெறுவது உள்ளிட்டவை தொடர்பாக தொடர்ந்து நிர்வாகிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
மேலும் சட்டமன்ற தொகுதிகளில் நிர்வாகிகளுக்கு இடையே இருக்கக்கூடிய பிரச்சனைகள் அனைத்தையும் களைந்து தேர்தலில் ஒற்றுமையுடன் பணிகளை மேற்கொள்ள வேண்டும் கூட்டணி கட்சிகளுக்கு வழங்கக்கூடிய தொகுதிகளாக இருந்தாலும் அந்த தொகுதிகளில் திமுக நிர்வாகிகள் பணிகளை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்டவை தொடர்பாக முதலமைச்சர் தொடர்ந்து தனித்தனியாக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
கடந்த ஒரு மாத காலமாக நிர்வாகிகளை சந்தித்து வரக்கூடிய முதலமைச்சர் இன்று பத்தாவது நாளாக பட்டுக்கோட்டை பாபநாசம் மணப்பாறை ஆகிய தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இதுவரையிலும் 27 தொகுதி நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து தேர்தல் பணி தொடர்பாக ஆலோசனை நடத்தி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.