ஜிஎஸ்டி சீர்த்திருத்தம், சட்டமன்ற தேர்தல் குறித்து திமுக எம்பிக்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்
இன்று காலை 10.30 மணியளவில் சென்னை அறிவாலயத்தில் முதலமைச்சர் தலைமையில் திமுக எம்பிக்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு அமைச்சரும், திமுக பொதுச்செயலாளாருமான துரைமுருகன், லோக்சபா மற்றும் ராஜ்ய சபாவை சேர்ந்த திமுக எம்பிக்கள் பங்கேற்றனர். இதில், சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் தொகுதி வாரியாக மேற்கொள்ள வேண்டிய பணிகள், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ளாதால் அதற்கான ஆயத்த நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்க கூடிய நிதி, ஜிஎஸ்டி வரி மாற்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலுக்கான நடவடிக்கைகள், வாக்காளார் பெயர் பட்டியல் திருத்த பணிகள், திமுகவின் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.