Close Menu
    What's Hot

    இனி குழந்தைகளுக்கு டிஜிட்டல் பாக்கெட் மணி!. ‘GPay-ல் புதிய அம்சம்!. எப்படி செயல்படுகிறது?

    ஜனநாயகன் லீக் விவகாரம்!. நடிகை பூஜா ஹெக்டே வருத்தம்!. 

    மத்திய கிழக்கில் ஓயாத போர்!. இதுவரை 2,000 பேர் மரணம்!. சிதைந்து கிடக்கும் நகரங்கள்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»ஏ.டீம் , பி.டீம் என எத்தனை டீம் வந்தாலும் நாங்களே சாம்பியன் – CM ஸ்டாலின்
    அரசியல்

    ஏ.டீம் , பி.டீம் என எத்தனை டீம் வந்தாலும் நாங்களே சாம்பியன் – CM ஸ்டாலின்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 7, 2025Updated:December 7, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    stalinnn
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஏ.டீம் ,பி.டீம் என எத்தனை வந்தாலும் நாங்கள் தான் சாம்பியன் என்று முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    மதுரை உத்தங்குடியில் நடந்த நிகழ்ச்சியில் ரூ.17 கோடி மதிப்பில் 7 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.3 ஆயிரத்து 65 கோடியில் 63 முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கியும் வைத்தார். மேலும், 2 ஆயிரத்து 70 கோடி மதிப்பிலான முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; மக்களுக்காக பல திட்டங்களை நம் அரசு கொண்டு வந்ததால் தான், எதிர்க்கட்சிகள் என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்கின்றனர். வயிற்று எரிச்சலால் ஆரோக்யமற்ற அரசியல் சூழ்ச்சிகளை செய்து பார்க்கிறார்கள். நாம் வளர்ச்சி அரசியலைப் பேசினால், அவர்கள் வேறு அரசியலை பேசுகிறார்கள். உறுதியாக சொல்கிறேன், அவர்கள் எத்தனை சூழ்ச்சி செய்தாலும், அனைத்தையும் முறியடிப்போம்.

    மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியல். அதை நிருபிக்கும் விதமாக, ரூ.36,660 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்துள்ளேன். இதுதான் எங்களின் அரசியல். 10 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு அறிவித்த எய்ம்ஸ் மருத்துவமனை என்னாச்சு? குஜராத் போன்ற பாஜ ஆளும் மாநிலங்களுக்கு நிதியை கொட்டிக் கொடுக்கிறார்கள். ஆனால், தமிழகத்திற்கு ஏதும் செய்வதில்லை.

    மதுரைக்கு மெட்ரோ ரயிலை சப்பையான காரணங்கள் சொல்லி நிராகரிக்கிறார்கள். பாஜ ஆளும் மாநிலங்களில் மெட்ரோ ரயிலுக்கு அனுமதி கொடுத்தீர்கள். மதுரையில் மெட்ரோ ஓடக் கூடாதா?

    மதுரை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க வைகை ஆற்றின் வடகரையில் 8 கி.மீ., நீளத்திற்கு ரூ.130 கோடி செலவில் புதிய சாலை அமைக்கப்படும்; மீனாட்சியம்மன் கோவிலை சுற்றியிருக்கும் 4 மாசி வீதிகளை சுற்றியுள்ள பகுதிகளில் புதிய பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும்; மதுரை கிழக்கு வட்டத்தில் அமைந்துள்ள உத்தங்குடி உபரிநீர் கால்வாயில் ரூ.7 கோடியில் தடுப்பு சுவர் கட்டப்படும்; மேலூர் வட்டத்தில் பெரியருவி நீர்த்தேக்கம் மற்றும் அதனை சார்ந்துள்ள கால்வாய்கள் ரூ.2 கோடியே 60 லட்சத்தில் புனரமைக்கப்படும்; பாலாற்றின் அருகே ரூ.9 கோடியே 50 லட்சம் மதிப்பில் புதிய தடுப்பணை கட்டப்படும் கொடிமங்கலம், மேலமாத்தூர், புதுக்குளம், விளாச்சேரி கிராமங்களில் இருக்கும் ஏரிகள் மற்றும் கால்வாய்கள் ரூ.10 கோடி செலவில் மேம்படுத்தப்படும்; சாத்தனார் அணை – வைகாசிப்பட்டி சாலை, முடுவாரப்பட்டி – சல்வார்பட்டி சாலை, பாலமேடு – மேம்பருளி வரை உள்ள சாலைகள் ரூ.1.50 லட்சம் செலவில் வனத்துறை அனுமதி பெற்று மேம்படுத்தப்படும்

    நம்முடைய சிந்தனை எல்லாம் தமிழகத்தின் வளர்ச்சியைப் பற்றி தான். ஆனால், சில கட்சிகளுக்கு எப்போதுமே கலவர சிந்தனை தான். தேவையில்லாத பிரச்னைகளை கிளப்பி, வளர்ச்சியை தடுக்கப் பார்க்கிறார்கள். காலம் காலமாக கார்த்திகை தீபத்திற்கு திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தீபம் ஏற்றுவது போல, கடந்த 3ம் தேதி மாலை 6 மணிக்கு பால தீபம் ஏற்றப்பட்டது. அதன்பிறகு, அதே நேரத்தில் உச்சிப்பிள்ளையார் கோவில் தீபமண்டபத்தில் தீபம் ஏற்றி, சுவாமி புறப்பாடாகியது.

    இது எல்லாம் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சிறப்பாக செய்யப்பட்டது. இது எல்லாம் உள்ளூர் மக்களுக்கு நன்றாக தெரியும். அவர்கள் எல்லாம் நல்லபடியாக தரிசனம் செய்து விட்டு வீடு திரும்பினர். ஆனால், இப்போது என்ன பிரச்னை நடந்து கொண்டிருக்கிறது. இந்தப் பிரச்னையை கிளப்பும் கூட்டத்தின் நோக்கம் என்ன? இதுவும் மக்களுக்கு நன்கு தெரியும்.

    ஆன்மிகம் என்பது மன அமைதியை, நிம்மதி தந்து மக்களை ஒற்றுமையாக இருக்க வைக்க வேண்டும். நாலு பேருக்கு நல்லது செய்ய வேண்டும். இதுதான் உண்மையான ஆன்மிகமாக இருக்க முடியும். ஒரு சிலர் அரசியல் லாபத்திற்காக பிரிவுகளையும், பிளவுகளை உண்டாக்குகின்றனர். இது கேடுகெட்ட அரசியல். தீபம் எங்கு, எப்போது ஏற்ற வேண்டுமோ, அங்கு வழக்கம் போல சரியாக, முறையாக ஏற்றப்பட்டு இருக்கிறது.

    3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்களில் குடமுழுக்கு செய்துள்ளது இந்த அரசு. இப்படிபட்ட அரசை ஆன்மிகத்திற்கு எதிரி என்று சொன்னால், சொல்பவர்களின் உள்நோக்கம் என்ன என்பது உண்மையான பக்தர்களுக்கு நன்கு தெரியும்.

    டில்லியில் இருந்து நமக்கு எத்தனை இடையூறுகள் கொடுத்தாலும், நிதி நெருக்கடிகளை ஏற்படுத்தினாலும், கவர்னர் மூலம் முட்டுக்கட்டை போட்டாலும், எல்லாவற்றையும் மீறி, இந்தியாவிலேயே நம்பர் 1 மாநிலமாக பொருளாதார வளர்ச்சியை தமிழகம் அடைந்திருக்கிறது. எங்களின் வளர்ச்சி பயணத்தை உங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நீங்கள் எப்படி பந்து வீசினாலும், அடிப்பது சிக்சர் தான்.

    அந்த டீமுக்கு பழைய அடிமைகள், புதிய அடிமைகள், பி டீம், சி டீம் சிக்கலாம். ஆனால், அந்தத் தொடரில் நாங்கள் தான் சாம்பியன். வரும் 15ம் தேதி முதல் விடுபட்ட மகளிருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப் போகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமலையாள இண்டஸ்ட்ரியல் அடி எடுத்து வைக்கும் நடிகர் சூர்யா !!!
    Next Article அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தரம் குறைந்த இலவச சைக்கிள்… அண்ணாமலை கண்டனம்
    Editor TN Talks

    Related Posts

    திருச்சி கிழக்கில் வேட்பு மனு தாக்குதல் செய்தார் தவெக தலைவர் விஜய்..!

    April 2, 2026

    பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் ஏன் தாமதம்?

    April 2, 2026

    திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் விவரம்!

    March 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இனி குழந்தைகளுக்கு டிஜிட்டல் பாக்கெட் மணி!. ‘GPay-ல் புதிய அம்சம்!. எப்படி செயல்படுகிறது?

    ஜனநாயகன் லீக் விவகாரம்!. நடிகை பூஜா ஹெக்டே வருத்தம்!. 

    மத்திய கிழக்கில் ஓயாத போர்!. இதுவரை 2,000 பேர் மரணம்!. சிதைந்து கிடக்கும் நகரங்கள்!

    6 மாதங்களில் அண்ணாமலைக்கு முதல்வர் பதவி; இதுதான் பாஜகவின் திட்டம்!. திருமா பேச்சு!

    தேர்தல் முடிந்தவுடன் தான், திமுகவினர் தங்கள் சுயரூபத்தை காட்டுவார்கள்!. அண்ணாமலை அட்டாக்!

    Trending Posts

    அடுத்த அதிரடி!. தலைமைச் செயலர், உள்துறை செயலாளர் மாற்றம்!. தேர்தல் ஆணையம் உத்தரவு!

    April 11, 2026

    தலைமைச் செயலர் மாற்றத்திற்கு கடும் எதிர்ப்பு!. தேர்தல் ஆணையத்திற்கு டி.ஆர்.பாலு கடிதம்!

    April 11, 2026

    மத்திய கிழக்கில் ஓயாத போர்!. இதுவரை 2,000 பேர் மரணம்!. சிதைந்து கிடக்கும் நகரங்கள்!

    April 11, 2026

    6 மாதங்களில் அண்ணாமலைக்கு முதல்வர் பதவி; இதுதான் பாஜகவின் திட்டம்!. திருமா பேச்சு!

    April 11, 2026

    தேர்தல் முடிந்தவுடன் தான், திமுகவினர் தங்கள் சுயரூபத்தை காட்டுவார்கள்!. அண்ணாமலை அட்டாக்!

    April 11, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.