Close Menu
    What's Hot

    திருச்செந்தூரில் வீடு வீடாக குக்கர் விநியோகம்..! தவெகவினரின் விளம்பரத்தால் வெடிக்கும் சர்ச்சை..!

    ரூ.3-ரூ.5வரை உயரும் தண்ணீர் கேன் விலை..! காரணத்தை விளக்கும் உரிமையாளர்கள்..!

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் RE-UNION..! யார் யார் எல்லாம் பங்கேற்கவுள்ளனர் என தெரியுமா?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»தமிழின் பெருமையை பிரதமர் பேசுவது தேர்தலுக்காக போடும் வேஷம்: மார்க்சிஸ்ட் காட்டம்
    அரசியல்

    தமிழின் பெருமையை பிரதமர் பேசுவது தேர்தலுக்காக போடும் வேஷம்: மார்க்சிஸ்ட் காட்டம்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 2, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ் மொழியின் பெருமைகளை பிரதமர் மோடி பட்டியலிட்டுப் பேசுவது 2026 சட்டப்பேரவை தேர்தலுக்காக அவர் போடும் வேஷம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் விமர்சித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பதிவில் கூறியுள்ளதாவது:

    பிரதமர் மோடி, ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் தமிழ் மொழியின் பெருமைகளைப் பற்றியும், ‘தமிழ் கற்கலாம்’ என்பது குறித்தும் புளகாங்கிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மொழியின் பெருமைகளைப் பட்டியலிட்டுப் பேசுவது 2026 சட்டப்பேரவை தேர்தலுக்காக பிரதமர் மோடி போடும் வேஷம். எனவே, தேர்தல் வரை இதுபோன்ற பொய்க்குரலை அவரிடம் இருந்து அடிக்கடி கேட்க வேண்டியிருக்கும்.

    இதைத்தான் ‘உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவது’ என்பார்கள் முன்னோர்கள். தமிழகத்துக்கு வெற்றுப் புகழுரைகள் தேவை அல்ல. உரிமைக்கான நிதி ஒதுக்கீடும், மத்திய அரசின் திட்டங்களில் தமிழருக்குரிய இடமும்தான் தேவை. பேச்சில் இருக்கும் தமிழ் மீதான பாசம், அவரது செயலில் இருக்கும் பாரபட்சமான கொள்கைகளால் முறிக்கப்படுகிறது. இது இரட்டை வேட அரசியல்.

    தமிழகத்தில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், கணினி பயிற்றுநர் பணிகளுக்காக சமீபத்தில் நடைபெற்ற போட்டித் தேர்வில், தமிழ் பாடத் தேர்வில் 85 ஆயிரம் பேர் தோல்வி அடைந்துள்ளனர் என்பது மிகுந்த வருத்தத்துக்குரிய செய்தி. இதில் யாரை குற்றம் சொல்வது? தாய்மொழி தமிழ் பாடத்தில் தோல்வியடைந்தது குறித்து ஆசிரியர்களும், சமூகமும் கவலைப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article2026 தேர்தல்: புதுச்சேரி முதல்வர் வேட்பாளராகிறாரா ஜெகத்ரட்சகன்?
    Next Article “விஜய் எனது அரசியல் எதிரி அல்ல” – கமல்ஹாசன் கருத்து
    Editor TN Talks

    Related Posts

    அமித்ஷாவுடன் டிடிவி தினகரன் திடீர் சந்திப்பு..! குக்கர் சின்னம் மட்டுமே என திட்டவட்டம்..!

    March 21, 2026

    அறிவிச்சாச்சு தேர்தல் தேதி – என்னாச்சு என்.டி.ஏ-வில் தொகுதி பங்கீடு?

    March 15, 2026

    தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-இல் தேர்தல் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

    March 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திருச்செந்தூரில் வீடு வீடாக குக்கர் விநியோகம்..! தவெகவினரின் விளம்பரத்தால் வெடிக்கும் சர்ச்சை..!

    ரூ.3-ரூ.5வரை உயரும் தண்ணீர் கேன் விலை..! காரணத்தை விளக்கும் உரிமையாளர்கள்..!

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் RE-UNION..! யார் யார் எல்லாம் பங்கேற்கவுள்ளனர் என தெரியுமா?

    அமித்ஷாவுடன் டிடிவி தினகரன் திடீர் சந்திப்பு..! குக்கர் சின்னம் மட்டுமே என திட்டவட்டம்..!

    புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் சொத்து மதிப்பு இவ்வளவா? வேட்பு மனுவில் உள்ள விவரங்கள்..!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.