திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் உடன்பிறப்பே வா என்ற தலைப்பில் கலந்துரையாடி வரும் நிலையில், மாவட்ட, நகர, பகுதி செயலாளர்களை மாற்றியுள்ளது அக்கட்சியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

2026 தேர்தல் பணி தொடர்பாக சட்டமன்ற தொகுதி வாரியாக நிர்வாகிகளை திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து கருத்துகளை கேட்டு வருகிறார்.

உடன்பிறப்பே வா என்ற தலைப்பில் திமுக நிர்வாகிகளுடன் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சரமான மு.க.ஸ்டாலின் ஒன் டூ ஒன் ஆலோசனை, நேற்று மதுரை தெற்கு, சிவகாசி சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.

இதுவரை மொத்தமாக 22 நாட்களில் 52 சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகளை முதலமைச்சர் சந்தித்துள்ள நிலையில் நேற்று 23வது நாளாக ஒன் டூ ஒன் ஆலோசனை நடைபெற்றது.

இந்நிலையில், கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் கார்த்தி நீக்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி புதிய மாவட்ட செயலாளராக கிரகாம்பெல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல, அரூர் தொகுதி, வேறொரு மாவட்டச் செயலாளருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, பல்வேறு ஒன்றிய, நகர, பகுதி செயலாளர்கள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒன்-டூ-ஒன் மூலம் சத்தமின்றி கட்சிக்குள், அதிரடி மாற்றத்தை நடத்தி வருகிறார். வேலை செய்யவில்லை என்றால், எப்பொழுது வேண்டுமானால் பதவி பறிபோகும் என்று முதலமைச்சர் தெரிவித்திருந்த நிலையில் கட்சிக்குள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால், எப்பொழுது வேண்டுமானால் பதவி பறிபோகும் என்று திமுக நிர்வாகிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version