2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக, அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணிகளை மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமி தனது பயணத்தை தொடங்கியிருக்கிறார். வனபத்திரகாளி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு சுற்றுப்பயணத்தை தொடங்கினார்.
தொடர்ந்து 33 சட்டமன்றத் தொகுதிகளில் பரப்புரை மேற்கொள்ளும் எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையத்தில் விவசாயிகளை சந்தித்து பேசிய அவர், அதன்பின் பிளாக் தண்டர் செல்கிறார். பிறகு மாலை 4.35 மணியளவில் பிளாக் தண்டர் முதல் ஊட்டி சாலை, காந்தி சிலை வரையில் ரோடு ஷோ செல்கிறார்.
வனபத்திரகாளி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு சுற்றுப்பயணத்தை தொடங்கினார்.
மாலை 5 மணிக்கு மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகில் பிரச்சார வாகனத்தில் நின்றவாறு பொதுமக்களிடையே உரையாற்றுகிறார்.
மாலை 5.40 மணிக்கு காரமடை பேருந்து நிறுத்தம் அருகில் பிரச்சார வாகனத்தில் நின்றவாறு பொதுமக்களிடையே உரையாற்றுகிறார்.
மாலை 6.40 மணிக்கு கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, பெரியநாயக்கன்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் பொதுமக்களிடையே உரையாற்றுகிறார்.
மாலை 7.40 மணிக்கு துடியலூர் ரவுண்டானா அருகில் பொதுமக்களிடையே உரையாற்றுகிறார்.
இரவு 9 மணிக்கு சரவணம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகில் பொதுமக்களிடையே உரையாற்றுகிறார்.
